நியூசிலாந்து அணி குவித்த இந்த ரன்கள். நிச்சயம் இந்த போட்டியில் திருப்பம் ஏற்படும் – யுவராஜ் ட்வீட்

Yuvraj-Singh

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து நியூசிலாந்து போட்டி குறித்து ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதன்படி பிளங்கட் சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும் இங்கிலாந்து தற்போது இருக்கும் நிலையில் உலககோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நியூசிலாந்து 240 ரன்கள் அடிக்குமாயின் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று யுவராஜ் ட்வீட் செய்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து 242 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.