
இந்திய அணிக்காக தனது 17 வயதில் இருந்து விளையாட தொடங்கியவர் யுவராஜ் சிங். 1999ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். அவரது காலகட்டத்தில்தான் இந்திய அணி 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றது.
அதன்பின்னர் இவருடைய புகழ் மங்கத் தொடங்கியது. தொடர்ச்சியாக அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்தார். அதன் பின்னர் ஒரு சில வாய்ப்புகளை மட்டும் பெற்றுக்கொண்டு 2018 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டார். ஏன்எனில் அதில் தான் ஏன் அப்போது ஓய்வினை அறிவித்தேன் என்பது பற்றி பேசியுள்ளார் யுவராஜ். இதுகுறித்து அவர் பேசுகையில்….
வாழ்க்கை மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நாம் பல விஷயங்களை எண்ணிப் பார்ப்பதில்லை திடீரென நாம் எங்கு இருக்கிறோம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைப்போம். இவ்வாறு பல நேரத்தில் நான் யோசித்துள்ளேன். அப்போதெல்லாம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தேன்.
பின்னர் ஒரு கட்டத்தை எட்டி விட்டேன் கிரிக்கெட் எனக்கு எப்போதும் மனதளவில் உதவியாக இருக்காது என்பதை உணர்ந்தேன். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எனக்கு அது மனதளவில் உதவவில்லை. இதன் காரணமாக ஓய்வு பற்றி சிந்தித்தேன். ஓய்வு பெறலாமா இல்லை வேண்டாமா இல்லை மேலும் மற்றொரு சீசனில் விளையாடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
கிரிக்கெட்டை அவ்வப்போது மிஸ் செய்தேன். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் கிரிக்கெட்டில் இருந்து விட்டேன் .இதன் காரணமாக தற்போதெல்லாம் அதனை பற்றி யோசிப்பதில்லை.இவற்றையெல்லாம் யோசித்துவிட்டு தான் ஓய்வு பெற விரும்பினேன் .ஆனால் ஓய்வு பெற்ற பிறகுதான் நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்.
அந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாள் என்னால் அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஓய்வு பெற்ற பின்னர் தான் எனக்கு சரியான தூக்கம் வந்தது என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.