தோனியை மறைமுகமாக சாடிய பதான். சப்போர்டுக்கு வந்த யுவ்ராஜ் சிங் – விவரம் இதோ

pathan 1
- Advertisement -

இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு ஐபிஎல் தொடரில் தற்போது வரை சிறப்பாக இல்லை. போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்து எப்போதும் இல்லாத வகையில் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

CSK-1

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பல தோல்விகளுக்கு காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது ஆட்டம் தான் என்று கூறப்படுகிறது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக ஆடவில்லை குறிப்பாக கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை சரியாக ஆடவில்லை.

இப்படி ஒரு கடுமையான விமர்சனம் இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மிகவும் மெதுவாக ஆடினார். இதன் காரணமாக வெற்றி பெற வேண்டிய இரண்டு போட்டியில் தோல்வியடைந்து என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

pathan 1

குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொண்டை வரண்டு போய் ஓட முடியாமல் மூச்சுத்திணறி நின்றிருந்த தோணி கடைசியில் மருத்துவர்கள் வந்து உதவினார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இர்பான் பதான் தோனியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். அதாவது தோனியை போன்றவர்களுக்கு வயது என்பது வெறும் எண் தான். ஆனால் என்னை போன்றவர்களுக்கு வயது என்று ஓய்வு பெறுவதற்கான காரணியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

dhonipathan

இதை பார்த்த ஹர்பஜன்சிங் நானும் உடன்படுகிறேன் இதில் ஒப்புக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்தார். மேலும் ஒரு சிலர் ஐபிஎல் என்பது இளம் வீரர்களுக்கான விளையாட்டு என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனை பார்த்த யுவராஜ் சிங் உடனடியாக தோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். இர்பான் பதானை மறைமுகமாக சீண்டிய யுவராஜ் சிங் ஐபிஎல் இளைஞர்களுக்கான விளையாட்டு என ஒப்புக்கொள்ள மாட்டேன். மேலும் வயதானவர்களும் மிகவும் சரியாக விளையாடுவார்கள் என்று தான் நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் யுவராஜ்சிங்.

Advertisement