என் உயிரே போனாலும் இந்தப்போட்டியில் நான் ஆடுவேன் பிறந்தநாள் அன்று யுவராஜ்சிங் குறித்த நிகழ்ச்சி பதிவு

yuvraj

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2000மாவது ஆண்டு கங்குலி தலைமையில் கென்யா அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர் சமீபத்தில் ஓய்வினை அறிவித்தார்.

yuvraj 2

இந்நிலையில் இன்று தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் இந்தியாவின் மிகச் சிறந்த வீரருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் யுவராஜ்சிங் குறித்த நெகிழ்ச்சி பதிவு ஒன்றினை இந்த பதிவில் நாம் காணலாம் வாருங்கள். 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை லீக் போட்டியில் தோற்றபோது ஏகப்பட்ட விமர்சனங்கள் இந்திய அணியின் மீது விழுந்தன.

அதனால் தோனி இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அந்த உலகக் கோப்பை தொடரிலும் யுவ்ராஜின் பங்களிப்பு மிக அதிகம் என்றால் அது நாம் அதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த அளவிற்கு அந்த உலகக் கோப்பையில் தனது பங்களிப்பை அளித்தார் யுவராஜ். மேலும் 6 பந்துகளில் 6 சிக்சர்கள், 12 பந்துகளில் 50 ரன்கள் என அந்த தொடரில் மிரட்டினார்.

YuvrajSingh

அதனை அடுத்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை குறிவைத்தது இந்திய அணி. இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதற்கு கொடுக்கும் விதமாக இந்த தொடரை குறிவைத்தது இந்திய அணி. 2011 உலக கோப்பை தொடர் முழுவதும் ஓபனராக சச்சின் டெண்டுல்கர் ரன் மழை பொழிந்து வர மிடில் ஆர்டரில் யுவராஜ் வெளுத்து வாங்கி ஆட்டங்களை வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும் பந்து வீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

yuvraj

மும்பையில் இறுதிப் போட்டி நடைபெறும் நாள் வந்தது. ஆனால் அப்போதுதான் யுவராஜ் சிங்கின் புற்றுநோய் தீவிரம் தென்பட்டது. இந்த தொடர் முழுவதுமே ரத்த வாந்தி மயக்கம் என எடுத்துக்கொண்டிருந்த யுவராஜ் சிங்கின் அறிகுறி தோனி சச்சின் ஆகியோருக்கு தெரியவர அவர்கள் இருவரும் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த விடயம் ஹர்பஜன் சிங்கிற்கும் தெரிய வந்து அவர் அணி நிர்வாகத்திடம் கூறப் போவதாக யுவ்ராஜிடம் கூறினாராம்.

yuvisix

ஆனால் ஹர்பஜனிடம் பேசிய யுவராஜ் சிங் நீங்கள் நிர்வாகத்திடம் எதுவும் கூற வேண்டாம் ஏனெனில் நாளை தான் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். நாளை இறுதி போட்டியில் நான் கலந்துகொண்டு மைதானத்தில் உயிர் இழந்தால் கூட எனக்கு அது மிகப்பெரிய கவுரவம் தான் இறுதிப் போட்டியின் கடைசி வரை நான் ஆடுவேன். அதன் பின்னர் என் உயிர் பிரிந்தாலும் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை எனவே நான் நாளைய போட்டியில் ஆட வேண்டும் என்று ஹர்பஜன் சிங்கிடம் யுவராஜ் கூறினாராம்.

yuvidhoni

அதன் பின்னர் அடுத்த நாள் இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. சொன்னதுபோலவே இறுதிவரை அதாவது வெற்றிக்கான சிக்ஸரை தோனி அடிக்கும் போது அவருடன் களத்திலிருந்து கண்ணீர் மல்க தனது மகிழ்ச்சியை கொண்டாடிய யுவராஜின் செயல் இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களின் கண்முன் நிற்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவ்ராஜ் சிங்.