அம்மாவிடம் பைக் ஓட்டமாட்டேன் என்ற சத்தியம்..! கார் மட்டும் ஓட்டும் யுவி..! வெளிவந்த ரகசியம்

yuvaraj-sing
- Advertisement -

ஆறு சிக்சர்கள் என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது யுவராஜ் சிங் தான். இந்திய வீரரான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகை கோபையை வெற்றிபெற்றதில் பெரும் பங்கை வகித்தவர். அந்த உலக கோப்பையில் இந்திய அணி விளையாடிய கடைசி 3 முக்கியான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர்.

yuvaraj-singh-car-collection

- Advertisement -

ஆடுகளத்தில் அதிவேக பந்துகளையும் சுலபமாக எதிர்கொள்ளும் எதிர் கொள்ளும் இந்த பஞ்சாப் வீரர் பைக்கை மட்டும் தனது வாழ்நாளில் தொடமாட்டாராம். இதற்கு காரணம் வேறு யாரும் இல்லை அவரது அம்மா ஷப்னம் சிங் தான். யுவராஜ் சிங்கின் அம்மாவிற்கு பைக் என்றால் மிகவும் பயமாம் அதனால் யுவராஜை பைக் ஓட்டவே கூடாது என்று கடுமையான கட்டளையை விதித்துள்லாராம்.

ஊருக்கே ராஜா என்றாலும் வீட்டிற்கு பிள்ளை தானே, அதனால் யுவராஜ் தன் தாய் விரும்பியபடியே தனது வாழ்நாளில் பைக் ஓட்ட மாட்டேன் என்று தந்து தாயிடம் சத்தியம் செய்துள்ளார். அவர் சத்தியம் செய்தபடியே இன்றுவரை யுவராஜ் பைக்கை தொட்டதே கிடையாதாம். சரி பைக்கை தானே ஓட்டுவதற்கு தடை என்று பல கார்களை வாங்கி குவித்துள்ளார் யுவராஜ்.

yuvaraj-singh

yuvaraj-

தனது கார் பார்க்கிங்கில் லம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4, ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ இ46 எம்3 கன்வர்டபிள், பிஎம்டபிள்யூ இ60 எம்5 , பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் என்று பல வகையான கார்களை வாங்கி குவித்துள்ளாராம். மேலும் இவர் வைத்துள்ள லம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4என்ற சார் தான் யுவராஜ் வைத்துள்ள கார்களிலேயே மிக அதிமாக செல்லக்கூடிய காராம், இவரது கார் சேகரிப்புகளை பார்த்தல் நமக்கு சற்று ஆச்சர்யமாக தான் இருக்கின்றது.

Advertisement