ஐ.பி.எல் தொடரில் சேக்கலனா என்ன ? உலகின் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கும் யுவ்ராஜ் சிங் – அதிகாரபூர்வ அறிவிப்பு

yuvi

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக பல ஆண்டுகள் திகழ்ந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். யுவராஜின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கான வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்தனர்.

yuvisix

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் அவர் ஏலம் எடுக்கப்படாததால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காத யுவ்ராஜ் சிங் பி.சி.சி.ஐ யின் அனுமதியோடு கனடாவில் நடைபெற்ற கிலோபல் t20 தொடரிலும், அபுதாபியில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக அவர் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக்பாஷ் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் :ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறோம்.

Yuvi

இந்த ஆண்டு யுவராஜ் சிங் பிக்பாஷ் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

Bbl

பி.சி.சி.ஐ விதிமுறைப்படி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் பிசிசிஐயின் அனுமதியோடு வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கலாம். அதன்படியே சில தொடர்களில் விளையாடினார் இந்நிலையில் தற்போது உலகில் மிகப்பெரிய தொடரில் யுவ்ராஜ் சிங் விளையாட இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.