ரோம் ஒரே நாளில் உருவாக்கப்படல.. 2 வருட உழைப்பு வீடியோவாக பதிவிட்டு.. அபிஷேக்கை வாழ்த்திய யுவராஜ் சிங்

Yuvraj SIngh
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்து தொடரை சமன் செய்துள்ளது. ஹராரே நகரில் ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட் 77*, ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர். அதைத் துரத்திய ஜிம்பாப்வே தடுமாற்றமாக விளையாடி 134 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு நிகராக ஹைதராபாத் அணியில் அடித்து நொறுக்கிய அவர் 42 சிக்ஸர்களை பறக்க விட்டார்.

- Advertisement -

யுவராஜ் வாழ்த்து:
அதனால் இத்தொடரில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். ஆனால் அதற்கும் சேர்த்து இரண்டாவது போட்டியில் வெளுத்து வாங்கிய அவர் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (47) ரன்கள் விளாசினார். குறிப்பாக 82 ரன்களில் போது அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து சதத்தை தொட்டது ரசிகர்களை பாராட்ட வைத்தது.

அந்த வகையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா அப்போட்டியின் முடிவில் தம்முடைய அதிரடியான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் தான் காரணம் என்று கூறினார். ஏனெனில் அவர் தான் கடந்த 2 – 3 வருடங்களாக தன்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு கடினமான பயிற்சிகளை கொடுத்து உழைத்ததாக அபிஷேக் கூறியிருந்தார். அத்துடன் யுவராஜ் சிங்கிற்கு வீடியோ கால் செய்தும் அபிஷேக் பேசியிருந்தார்.

- Advertisement -

அப்போது “இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் நிறைய வரும்” என்று அவருக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஒற்றை நாளில் உருவாக்கப்படாத ரோம் நகரம் போல அபிஷேக் ஷர்மா ஒரு நாளில் உருவாகி விடவில்லை என யுவராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 2 வருடங்களாக தம்முடைய மேற்பார்வையில் அபிஷேக் எடுத்த கடினமான பயிற்சிகளை அடங்கிய வீடியோவையும் யுவராஜ் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவை சாய்க்க.. இந்தியாவின் ரூட்டை கையிலெடுத்த இலங்கை.. ஜாம்பவானை பயிற்சியாளராக அறிவிப்பு

அதை ட்விட்டரில் பதிவிட்டு யுவராஜ் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு. “ரோம் ஒரு நாளில் கட்டப் படவில்லை. உங்களுடைய பயணத்திற்கும் முதல் சர்வதேச சதத்திற்கும் வாழ்த்துக்கள் அபிஷேக் சர்மா. இன்னும் நிறைய வரும்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகின்றது.

Advertisement