- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனது வாழ்க்கையை படமாக எடுத்தால் இவர்தான் ஹீரோவா நடிக்கனும் – யுவராஜ் சிங் வேண்டுகோள்

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக சினிமாவில் எடுக்கும்பொழுது அந்த படத்திற்கு வரவேற்பு அதிக அளவில் கிடைக்கும். அதன்படி ஏற்கனவே சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெற்றியும் கண்டுள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் பயோபிக், தோனியின் பயோபிக் மற்றும் தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு என அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

மேலும் தற்போது இந்தியாவின் முதல் உலக கோப்பை நாயகனான கேப்டன் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக வெளியிட இருக்கின்றனர். 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவ் வாழ்க்கை வரலாறு “83” என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி உள்ளது.

- Advertisement -

இந்தப்படத்தில் கபில் தேவின் கேரக்டரில் ரன்வீர்சிங் நடிக்கிறார். அதேபோல தமிழக வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். மேலும் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோபிக்கில் தமிழ் நடிகை டாப்ஸி நடித்து தற்போது தயாராகி வருகிறது.

இவ்வாறாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கிற்கு பெரிய வரவேற்பு இருப்பதால் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது யுவராஜ்சிங்கிடம் உங்களது பயோபிக் திரைப்படம் உருவானால் அதற்கு ஹீரோவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு அதிரடியாக பதில் அளித்துள்ள யுவ்ராஜ் கூறியதாவது : நான் பண்ணலாமே ஆனால் எனக்கு நடிக்க தெரியாது என்பதால் அது நன்றாக இருக்காது. எனவே எனது வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என்பது இயக்குனரின் முடிவுதான். அது ஒருவேளை என் விருப்பத்திற்கு பாலிவுட் பலமாக அமைந்தால் சித்தாந்த் சதுர்வேதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அவர் எனது வேடத்தை ஏற்று நடிக்க விரும்புவதை நான் பார்க்க விரும்புகிறேன் என்று யுவ்ராஜ் தெரிவித்தார். சித்தாந்த் சதுர்வேதி 2019ஆம் ஆண்டு வெளியான கல்லிபாய் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by