என்னை மாதிரி மிஸ் பண்ணாம இதை செஞ்சு எஸ்ட்ரா 3000 ரன்ஸ் அடிங்க.. அபிஷேக், கில்லுக்கு யுவி அட்வைஸ்

Yuvraj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனைப் படைத்த அவர் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில் தங்களுடைய காலங்களில் இந்தியாவுக்காக விளையாடும் நேரங்களில் ஃகோல்ப் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்று யுவ்ராஜ் கூறியுள்ளார்.

ஒருவேளை இப்போது போல தம்முடைய காலங்களில் ஃகோல்ப் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்காக எக்ஸ்ட்ரா 3000 ரன்கள் அடித்திருப்பேன் என்றும் யுவ்ராஜ் கூறியுள்ளார். எனவே தங்களுடைய மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சமயம் கிடைக்கும் போது ஃகோல்ப் விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்வது எக்ஸ்ட்ரா ரன்கள் அடிக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கில், அபிஷேக்கிற்கு அட்வைஸ்:

இது பற்றி யுவ்ராஜ் பேசியது பின்வருமாறு. “ஃகோல்ப் விளையாடியிருந்தால் 2000 ரன்களை கூடுதலாக அடித்திருப்பேன் என்று கபில் தேவ் பாஜி தெரிவித்திருந்தார். நானும் அதை செய்திருந்தால் 3000 ரன்கள் எக்ஸ்ட்ரா அடித்திருப்பேன். எனவே ஃகோல்ப் விளையாடுமாறு அவர்களிடம் (கில், அபிஷேக்) தெரிவித்து அதற்கான ஊக்கத்தையும் நான் கொடுப்பேன்”

“அதற்கான நேரத்தைக் கண்டறிவது தான் கடினமாக இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரின் போது அவர்கள் ஃகோல்ப் விளையாடுவதற்கான நேரத்தைக் கண்டறிந்து சில பந்துகளை அடிப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஃகோல்ப் விளையாடுவது அவர்களைப் பொறுத்தது. தற்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் அவர்கள் நமது ஆட்டத்தை முன்னேற்ற எது உதவப்போகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும்”

- Advertisement -

எக்ஸ்ட்ரா ரன்ஸ் அடிக்க:

“ஆனால் அனைத்து விளையாட்டு வீரர்களையும் கோல்ஃப் விளையாடுமாறு நான் ஊக்கமளிப்பேன். அது உங்களைப் பிரித்து சிறந்த மனதைப் பெறுவதற்கான நல்ல வழியாகும். உங்களுடைய உடலில் ஏற்படும் பாரத்தை குறைத்து மனதை உற்சாகப்படுத்தும் எந்த விளையாட்டையும் நான் விரும்புவேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ஃகோல்ப் கலாச்சாரம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: 2026 சிஎஸ்கே கம்பேக் பற்றி தோனி சொன்னது சரியே.. டெஸ்டில் வேலை செஞ்சுட்டு நானும் வந்துருவேன்.. ருதுராஜ் பேட்டி

“அவர்களுடைய பெரும்பாலான கிரிக்கெட்டர்கள் தங்களுடைய இளம் வயதிலிருந்தே ஃகோல்ப் விளையாடுவார்கள். சொல்லப்போனால் அவர்கள் நிறைய ஃகோல்ப் விளையாடி கிரிக்கெட்டை குறைவாக பயிற்சி செய்வார்கள். ஏனெனில் கிரிக்கெட்டுக்கான பயிற்சிகளை எடுக்கும் போது 3 நாட்களில் உங்களால் எதையும் மாற்ற முடியாது. கிரிக்கெட்டில் விளையாடுவதால் மட்டும் உங்களுடைய மனம் புத்துணர்ச்சியாக இருக்காது. அதனால் உலகில் எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் ஃகோல்ப் விளையாடுவது தங்களுடைய விளையாட்டில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வரும் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement