2026 சிஎஸ்கே கம்பேக் பற்றி தோனி சொன்னது சரியே.. டெஸ்டில் வேலை செஞ்சுட்டு நானும் வந்துருவேன்.. ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமாக விளையாடி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. அந்த அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தை சந்தித்து வெளியேறியது முக்கிய காரணமானது. அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட தோனி தலைமையிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி காண முடியவில்லை.

இருப்பினும் கடைசிக்கட்ட போட்டிகளில் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி நம்பிக்கை கொடுத்தனர். எனவே அவர்களை வைத்து 2026இல் சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவர்களை வைத்து 2026இல் சிஎஸ்கே அணியை ருதுராஜ் எளிதாக வெற்றிப் பாதையில் நடக்க வைப்பார் என்றும் தோனி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

2026இல் சென்னை கம்பேக்:

இதற்கிடையே காயத்திலிருந்து குணமடைந்த ருதுராஜ் உள்ளூரில் விளையாடத் துவங்கியுள்ளார். குறிப்பாக பெங்களூருவில் நடைபெறும் 2025 துலீப் கோப்பை செமி ஃபைனலில் மேற்கு மண்டல அணிக்காக அவர் சதத்தை அடித்து 184 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் 2026இல் சிஎஸ்கே கம்பேக் கொடுப்பது பற்றி தோனியின் கருத்துக்கள் சரியானது என்று ருதுராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தோனியின் ஆதரவுடன் 2026இல் சிஎஸ்கே அசத்தும் என்று தெரிவிக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய பேட்டிங்கை முன்னேற்ற வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை பொறுத்த வரை எப்போதும் எங்களுடன் ஆதரவுக்காக இருப்பார். அதை வெளிப்படையாக சொல்வதில் எந்தக் கூச்சமும் இல்லை”

- Advertisement -

ருதுராஜ் நம்பிக்கை:

“கடந்த ஐபிஎல் தொடரை காயத்தால் நான் தவற விட்டேன். அதன் பின் சில மாற்று வீரர்கள் வந்தனர். அதனால் எங்களுடைய அணி கொஞ்சம் வலுவாக மாறியுள்ளது. அதோடு நானும் விளையாடினால் எங்களுடைய அணி இன்னும் வலுவாகும். அதையே தோனி தெரிவித்திருப்பார் என்று நான் கருதுகிறேன். இந்தியா ஏ அணி விளையாடிய தொடரில் இடம் பெறாததால் எனக்கு தயாராக நல்ல நேரம் கிடைத்தது”

இதையும் படிங்க: 3000 ரன்ஸை மிஸ் பண்ணிட்டேன்.. கபில் தேவ் சொன்ன மாதிரி அதை செஞ்சுருந்தா இன்னும் அசத்திருப்பேன்.. யுவி வருத்தம்

“அதிலிருந்து கம்பேக் கொடுத்த பின் என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்டத்தில் வேலை செய்ய முடிவெடுத்தேன். அதற்காக கொஞ்சம் நேரம் கொடுத்த நான் இன்னும் வேலை செய்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்று கூறினார். மேலும் புஜ்ஜி பாபு போன்ற உள்ளூர் தொடரில் விளையாடியது நம்முடைய ஆட்டத்தை முன்னேற்ற உதவியதாக தெரிவிக்கும் அவர் மகாராஷ்டிரா அணியில் தமக்கு 4வது பேட்டிங் இடம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement