நல்ல வேளை அந்த ஒரு பாலை விட்டுடீங்க. ரொம்ப நன்றி ராகுல் திவாதியா – வாழ்த்துக்களை தெரிவித்த யுவ்ராஜ்

Tewatia-3
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி மைதானத்தின் அளவு காரணமாக முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான போட்டியாக அமைந்துவிட்டது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 223 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மயங்க் அகர்வால் சதம் மற்றும் கேஎல் ராகுல் அரைசதம் விளாசினர்.

இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியின் துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்து விட்டாலும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினார் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார், ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடிக்க அந்த அணி கிட்டத்தட்ட வெற்றிவாய்ப்பிற்கு சென்றது .

- Advertisement -

ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் இருந்த அந்த அணியை ராகுல் திவாத்தியா 31 பந்தில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தால் இதில் செல்டன் காட்ரெல் என்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஓவரில் மட்டும் ஐந்து சிக்சர்கள் விளாசி வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார் ராகுல் திவாதியா.

Tewatia-1

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அதை பார்த்து மிரண்டுபோன யுவராஜ் சிங் தனது சாதனைக்கு பங்கம் வந்துவிடுமோ என்பது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ளார். மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு நல்லவேளை ஒரு பந்தை விட்டுவிட்டீர்கள். 6 சிக்சர்கள் நீங்கள் அடிக்கவில்லை இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் யுவராஜ் சிங்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராகுல் திவாதியாவின் இந்த அருமையான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement