அபிஷேக் சர்மாவை விட சுப்மன் கில் இந்த விடயத்தில் ஒரு படி மேலதான் இருக்கார் – யுவ்ராஜ் சிங் பாராட்டு

Yuvraj Singh
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் சுப்பன் கில் மற்றும் துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆகியோர் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் அணிக்காக மிக இளம் வயதிலிருந்தே ஒன்றாக இணைந்து விளையாடி வரும் அவர்கள் இருவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஜோடியாக விளையாடியுள்ளனர். அதோடு சுப்மன் கில் ஒருபுறம் எதிர்கால கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் அபிஷேக் சர்மா டி20 போட்டிகளுக்கான நிரந்தர துவக்க வீரருக்கான இடத்தை பிடித்து விட்டார்.

சுப்மன் கில் அபிஷேக் சர்மாவை விட ஒருபடி மேலேதான் : யுவ்ராஜ் சிங்

அவரிடம் இருக்கும் திறமைக்கு வெகுவிரைவில் அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் இன்னும் சில மாதங்களில் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தான் பயிற்றுவித்த இரண்டு வீரர்கள் இன்று இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருவது குறித்தும் அவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள தனித்துவம் குறித்தும் சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான யுவ்ராஜ் சிங் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான் அவர்கள் இருவருடனும் கொரோனா காலத்தில் தான் பயிற்சியை துவங்கினேன். அப்போது சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடிவதை என்னால் உணர முடிந்தது. அதோடு மற்ற வீரர்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிகளவு பயிற்சிகளை சுப்மன் கில் மேற்கொள்வார். அதன் காரணமாகவே அவர் எந்த வடிவமான போட்டியிலும் சிறப்பாக விளையாட முடிகிறது. அந்த விடயத்தில் அபிஷேக் சர்மாவை விட ஒரு படி சுப்மன் கில் மேலேதான் இருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று அபிஷேக் ஷர்மா பயின்று வந்த காலத்தில் நான் அவரிடம் சொன்னதெல்லாம் ஒரே விடயம் தான். என்னுடைய பயிற்சிக்கு கீழ் இதே மாதிரி நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்படு நிச்சயம் இந்திய அணிக்காக நீ விளையாடுவாய் என்று கூறினேன். அதே போன்று சரியாக நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் கழித்து அவர் இந்திய அணிக்காக விளையாடினார்.

இதையும் படிங்க : 2016 டி20 உலககோப்பை டூ 2026 டி20 உலககோப்பை : நீடித்து இந்திய அணியில் இருக்கும் 2 வீரர்கள் – விவரம் இதோ

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவது என்பதை விட இந்திய அணிக்காக விளையாட வேண்டுமெனில் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்திய அணியிலும் நீடிக்க முடியும். அப்படி நான் பயிற்றுவித்த இரண்டு வீரர்கள் தற்போது இந்திய அணியில் முக்கிய இடம் பிடித்து விளையாடுவதில் மகிழ்ச்சி என்று யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement