2016 டி20 உலககோப்பை டூ 2026 டி20 உலககோப்பை : நீடித்து இந்திய அணியில் இருக்கும் 2 வீரர்கள் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மாபெரும் உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதால் இந்த தொடரின் கடைசி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

10 ஆண்டுகள் இந்திய அணியில் நீடித்துள்ள 2 வீரர்கள் :

ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வேளையில் இம்முறை நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் விளையாட இருக்கிறது. எனவே மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சூரியகுமார் யாதவின் தலைமையில் பலம் வாய்ந்த அணியாகவே அறிவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்கிற நம்பிக்கையும் பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு வீரர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட வீரர்கள் இந்திய டி20 அணியிலிருந்து ஓய்வு அறிவித்தும், பார்மின்றி வெளியேறிய வேளையில் 10 ஆண்டுகளாக நீடித்து இந்த உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா தான் 2016-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது தோனியின் தலைமையின் கீழ் விளையாடி 10 ஆண்டுகள் கழித்து இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர். பும்ரா 2016 ஆம் ஆண்டு இளம் வேகப்பந்து வீச்சாளராக ஆரம்பித்து இன்று ஒரு லெஜன்ட் பந்துவீச்சாளராக 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கிறார்.

இதையும் படிங்க : என்னோட காலேஜ் லைப்ல நான் பாஸ்ட் பவுலர்லாம் கிடையாது.. ஜஸ்ப்ரீத் பும்ரா கூறிய சம்பவம் – விவரம் இதோ

அதே வேளையில் கடந்த 2016-ஆம் ஆண்டு இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடிய ஹர்திக் பாண்டியா இன்று உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக டி20 போட்டிகளில் 2000 ரன்களுக்கு மேல் அடித்து 100 விக்கெட்டுக்கு மேல் குவித்து மிகச் சிறப்பான ஆல்ரவுண்டராக இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறார்.

Advertisement