- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2008 ஆஸி தொடரில் நடிகையுடன் டேட்டிங் செஞ்சு இந்திய அணியில் மாட்டிகிட்டேன்.. யுவராஜ் பகிர்ந்த பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் அவர் வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் புற்றுநோயையும் பொறுப்பெடுத்தாமல் நாட்டுக்காக விளையாடிய அவர் தொடர்நாயகன் விருது வென்று 28 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2008 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் போது ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். கடைசியில் இந்திய அணியினரிடம் மாட்டிக் கொண்டதாகவும் யுவராஜ் கூறியுள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நடிகையுடன் டேட்டிங்:

“நான் ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருந்தேன். அவருடைய பெயரை சொல்ல மாட்டேன். அந்த சமயத்தில் அவள் மிகவும் நல்லவள் அனுபவம் வாய்ந்தவள். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது “கேளுங்கள் நான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்த இருப்பதால் கொஞ்சம் நாட்கள் நாம் சந்திக்க வேண்டாம்” என்று அவளிடம் சொன்னேன். ஆனால் அவள் என்னை பின்தொடர்ந்து கான்பெராவுக்கு வந்தாள்”

“முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் நான் அதிக ரன்கள் எடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்” என்று அவளிடம் கேட்டேன். அதற்கு “உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதாக” அவள் என்னிடம் சொன்னாள். எனவே இரவில் மீண்டும் சந்தித்து நாங்கள் பேசினோம். அப்போது நீ உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்த வேண்டும். நான் எனது கேரியரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவளிடம் சொன்னேன்”

- Advertisement -

நடிகை பெயரை சொல்லாத யுவி:

“ஏனெனில் ஆஸ்திரேலிய தொடர் வாய்ப்பு எந்தளவுக்கு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். அதைத் தொடர்ந்து கான்பெராவிலிருந்து நாங்கள் அடிலெய்ட் நகருக்கு சென்றோம். அவள் என்னுடைய சூட்கேஸை பேக் செய்தாள். மறுநாள் காலையில் எங்கே என்னுடைய காலணிகளை (ஷூ) தேடிக் கொண்டிருந்தேன். அவள் அதை பேக் செய்து விட்டதாக சொன்னாள்”

இதையும் படிங்க: டிராவிட் முடிவால் 5க்கு 6 சிக்ஸரால் பதிலடி கொடுத்தேன்.. ஃபிளின்டாப் ஸ்லெட்ஜிங் பற்றி யுவராஜ் பேட்டி

“அதனால் பேருந்தில் நான் எப்படி செல்வேன் என்று கேட்டேன். அதற்கு என்னுடையதை அணிந்து செல்லுங்கள் என்று அவள் சொன்னாள். ஆனால் அவளிடம் இளஞ்சிவப்பு நிற காலணிகள் இருந்ததால் கடவுளே இதை எப்படி அணிந்து செல்வேன் என்பது போல் போட்டுக் கொண்டேன். அதை மறைக்க என் காலணிகளுக்கு முன்னால் பையை எடுத்துச் சென்றேன். ஆனால் எங்கள் அணியினர் அதைப் பார்த்து சிரித்து கைதட்டினர். அதனால் விமான நிலையத்தில் வேறு காலணிகள் வாங்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

- Advertisement -