அடுத்த 10 வருஷத்துல இந்த பையன் கிரிக்கெட்ல சூப்பர் ஸ்டாரா இருப்பான் – யுவ்ராஜ் சிங் பேட்டி

Yuvraj
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்திய அணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தோனிக்கு பிறகு வந்த எந்த ஒரு கேப்டனாலும் ஐசிசி நடத்தும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதால் இந்திய அணியின் மீது கூடுதல் அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படும் வேளையில் அதற்கு முன்னதாக இந்திய மண்ணில் அடுத்த ஆண்டு 50-ஓவர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

IND-Team

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடருக்காக தற்போதே இந்திய ஒருநாள் அணி தயார்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணி தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால் மீண்டும் சில இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பினை இழந்துள்ளனர்.

அந்த வகையில் நியூசிலாந்து தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கூறுகையில் : சுப்மன் கில் கடினமான உழைத்து அனைத்தையும் தற்போது மிகச் சிறப்பாக தனது ஆட்டத்தில் செயல்படுத்தி வருகிறார்.

Shubman Gill

இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரராக சுப்மன் கில் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக நான் நம்புகிறேன். டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நிச்சயம் அவர் 2023-ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் துவக்க வீரருக்கான போட்டியில் இருப்பார்.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் அவருக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் மிகச் சிறப்பாக அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனாலும் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரியவில்லை. இருப்பினும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக சுப்மன் கில் மாறுவார். நிச்சயமாக என்னை பொறுத்தவரை 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் துவக்க வீரராக சுப்மன் கில் விளையாட்டினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும். அந்த அளவிற்கு தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் அவர் விளையாடி வருகிறார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs BAN : செய்த தவறை ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா. முதல் போட்டி முடிந்தபின் கிடைத்த தண்டனை

யுவராஜ் சிங் கூறியது போலவே : இந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 71 ரன்கள் சராசரியுடன் 638 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டை பார்க்கையில் சுப்மன் கில் இதுவரை 15 போட்டியில் 687 ரன்களையும், 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 579 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement