இனிமே இவரை யாரும் கலாய்க்காதீங்க, என் நண்பனை கொண்டாடுங்க – பிராட் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட யுவ்ராஜ் சிங்

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடைபெற்றது. 21 வயது இளம் வீரர் ஸ்டூவர்ட் பிராட் யுவராஜ் சிங்கிற்கு எதிராக பந்துவீச ஆயுத்தமானார். அந்த ஓவருக்கு முன்னர் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் யுவராஜ் சிங்கை கடுப்பேற்றி விட, அடுத்த ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் நம்ம யுவராஜ் சிங்.

12 பந்துகளில் அரை சதம் விளாசினார். அந்தத் தருணத்திலிருந்து எப்போதெல்லாம் ஸ்டூவர்ட் பிராடின் பெயர் அடிபடுகிறதோ, அப்போதெல்லாம் யுவராஜ் சிங் அவரை அடித்த 6 சிக்சர்களும் அடிபட்டுவிடும். இதனை வைத்து சமூகவலைதளத்தில் ஸ்டூவர்ட் பிராடை கடுமையாக மக்கள் கலாய்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் ஸ்டூவர்ட் பிராட் மிகவும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்.

அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் யுவராஜ் சிங்.

“எப்போதெல்லாம் ஸ்டூவர்ட் பிராடை பற்றி எழுதுகிறேனோ, அப்போதெல்லாம் மக்கள் அந்த 6 சிக்சர்களை பற்றியும், நான்தான் அதை அடித்தேன் என ஒப்பிட்டுப் பேசி உண்மையான தலைப்பை நீர்த்துப்போகச் செய்து விடுகிறார்கள்”. ஆனால் இன்று எனது ரசிகர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த மனிதன் சாதனை படைத்ததற்கு அவரை வாழ்த்துங்கள். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது ஒரு நகைச்சுவை அல்ல!

- Advertisement -

தொடர்ந்து பல ஆண்டுகால உழைப்பு, கடினமான வேலை, ஆகியவற்றின் பலனே இது. ஸ்டூவர்ட் பிராட்,! என் நன்பனே! எப்போதெல்லாம் நீ கீழே விழுந்தாயோ, அப்போதெல்லாம் வீறுகொண்டு எழுந்து இருக்கிறாய். நீ ஒரு ஜாம்பவானாக மாறிவிட்டாய். உனக்கு எனது மிகப்பெரிய வணக்கங்கள் என்று பதிவு செய்துள்ளார் யுவராஜ் சிங்.