விராட் கோலி டாப்பரா இருப்பாரு.. டி20 உ.கோ ஃபைனலில் இந்தியாவுடன் மோதும் அணிகளை கணித்த யுவராஜ் சிங்

Yuvraj SIngh 3
- Advertisement -

அமெரிக்காவில் துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இம்முறையும் ரோகித் தர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர். எனவே 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வெல்வோமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த நிலையில் இத்தொடரில் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெறும் அணிகள் பற்றி முன்னாள் வீரர்கள் கணிப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல டிராவிஸ் ஹெட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைப்பார்கள் என்று ரிக்கி பாண்டிங் கணிப்பு வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

யுவராஜ் கணிப்பு:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் 2007 போல இம்முறையும் இந்தியா சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு சென்று கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபைனலில் இந்தியாவுடன் மோதுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான் வரும் என்று அவர் கணித்துள்ளார். அதே சமயம் ஃபைனலுக்கு ஆஸ்திரேலியா மட்டும் வந்து விடக்கூடாது என்றும் யுவராஜ் சிங் ஒரு சாதாரண ரசிகனை போல கலகலப்பாக பேசியுள்ளார்.

மேலும் 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி இந்த தொடரிலும் அதிக ரன்கள் அடிப்பார் என்று யுவராஜ் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2007 உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடிய விதத்தையும் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற விதத்தையும் நான் உணர்கிறேன். அது நேரத்தை பொறுத்தது”

- Advertisement -

“எங்களிடம் பெரிய தொடர்களில் வெல்லும் தன்னம்பிக்கை இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே இந்தியா தங்களுக்கு தாங்களே ஆதரவு கொடுத்து தங்களின் பலத்திற்கு தகுந்தார் போல் விளையாடினால் கண்டிப்பாக அவர்களால் வெற்றியை நோக்கி செல்ல முடியும். அதைத்தான் நானும் நம்புகிறேன். ஃபைனலில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வரும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: விராட், ரோஹித்தால் இந்திய அணி ஊனமாகிடுச்சு.. வீக்னெஸை சரிசெய்ய இதை செஞ்சாகனும்.. இர்பான் பதான்

“பாகிஸ்தான் அணியும் 3வதாக வரலாம். ஆனால் ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். அவர் மிகப்பெரிய காயத்திலிருந்து மீண்டும் வருகிறார். அதே போல ஐபிஎல் தொடரில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டார். எனவே இந்த தொடரிலும் அவர் அதிக ரன்கள் அடிக்கக்கூடியவராக இருப்பார் என்று தெரிகிறது” எனக் கூறினார்.

Advertisement