நெஞ்சில் வஞ்சம்? தோனிக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் அணியை வெளியிட்ட யுவராஜ்.. 3 இந்தியருக்கு இடம்

Yuvraj Singh 3
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்நிலையில் அந்த தொடரின் முடிவில் உங்களுடைய ஆல் டைம் சிறந்த கனவு அணியை தேர்ந்தெடுக்குமாறு செய்தியாளர்கள் யுவராஜ் சிங்கிடம் கேட்டனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று தன்னுடைய கனவு அணியை வெளியிட்ட யுவராஜ் சிங் இந்தியாவிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்ந்தெடுத்தார். அத்துடன் சந்தேகமின்றி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

- Advertisement -

நெஞ்சில் ஆறாத வஞ்சம்:
ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக வென்ற தோனி தலைமையில் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறியது. அதனால் தோனி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாகவும் சிறந்த வீரராகவும் போற்றப்படுகிறார். இருப்பினும் அவரை யுவராஜ் சிங் தேர்வு செய்யாதது பல இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

ஆனால் தம்முடைய கடைசி காலகட்டத்தில் தோனி இந்திய அணியில் போதுமான வாய்ப்பை கொடுக்கவில்லை என்ற அதிருப்தி அவருக்கு எப்போதும் உள்ளது. சொல்லப்போனால் 2007இல் தம்மிடம் வரவேண்டிய கேப்டன்ஷிப் பொறுப்பு தோனியிடம் சென்றதாக ஒரு முறை யுவராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதனால் தோனி சக வீரரே தவிர தன்னுடைய நண்பர் கிடையாது என்றும் யுவராஜ் ஏற்கனவே கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி கடந்த வருடம் அவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு. “நான் அணிக்கு வந்த போது தோனி 4 வருடம் ஜூனியராக இருந்தார். எனவே நீங்கள் கேப்டன் துணை கேப்டனாக இருக்கும் போது ஒருவரது முடிவை மற்றொருவர் விரும்ப மாட்டீர்கள். களத்திற்கு வெளியே உங்களுடைய சக வீரர்கள் நண்பர்களாக இருக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஸ்டைல் திறன் இருக்கிறது. எந்த அணியிலுமே அதில் விளையாடும் 11 வீரர்களும் நண்பர்களாக இருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலிக்கு அடுத்து டி20 போட்டியில் இந்திய அணிக்காக முக்கிய சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

“ஆனால் நாட்டுக்காக களத்தில் ஈகோவை விட்டுவிட்டு விளையாடுவார்கள்” என்று கூறியிருந்தார். அந்த வகையில் மனதிற்குள் தோனி மீது கொஞ்சம் வஞ்சம் இருப்பதாலேயே யுவராஜ் அவரை தேர்ந்தெடுக்கவில்லை என்றே சொல்லலாம். யுவராஜ் கனவு அணி: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா, விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத் ஆண்ட்ரூ ப்ளின்டாப்

Advertisement