விராட் கோலிக்கு அடுத்து டி20 போட்டியில் இந்திய அணிக்காக முக்கிய சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து நாடு திரும்ப தாமதமானதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இடம்பெறாத அவர் மூன்றாவது போட்டியில் இருந்து இந்திய அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 153 ரன்களை துரத்தி விளையாடிய போது இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 153 ரன்கள் இலக்கினை விக்கெட் எதுவும் விழாமல் துரத்தி இந்திய அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரராக இவர் மாறுவதற்கான அதிக வாய்ப்பு தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஆடிய அற்புதமான ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஒரு முக்கிய சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய வீரராக விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 90 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோன்று 2019-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையும் படிங்க : அதுக்காக என்னை திட்டுனாங்க.. 2024 டி20 உ.கோ ஜெய்க்க முக்கிய காரணமான என்னை மறந்துட்டாங்க.. கங்குலி ஆதங்கம்

இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜெய்ஸ்வாலும் 93 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்ததால் கோலிக்கு அடுத்து 90 ரன்களை கடந்து டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement