
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஒரு மாதத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. அதற்கு அடுத்து பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும், மும்பை அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இதன் காரணமாக மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த அணிகளில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்? என்றும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தயில் அதிகரித்துள்ளது.
இவ்வேளையில் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான யுவ்ராஜ் சிங் இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் தனக்கு பிடித்த அணி எது? என்றும் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு தனக்கு பிடித்த அணிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் முதன்மையான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி என்று தெரிவித்துள்ளார். இப்படி அவர் கூறியதற்கு காரணம் யாதெனில் : யுவராஜ் சிங்கின் சிஷ்யனாக பார்க்கப்படும் அபிஷேக் ஷர்மா ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவதாலே சன் ரைசர்ஸ் அணியை அவர் பிடித்தமான அணி என்று கூறிருக்கலாம்.
இதையும் படிங்க : பஞ்சாப் 201 ரன்ஸ்.. சேசிங்கில் குறுக்கே கௌசிக் போல வந்த மழை.. கொல்கத்தா வித்யாசமான சாதனை
அதேபோன்று யுவராஜ் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதனால் அம்மாநில அணி இம்முறை வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் கோப்பையை கைப்பற்றாத பஞ்சாப் அணி இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெறுவார்கள் என்பது உறுதி.