- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4க்கு 4.. 2000 – 2024 வரை.. ஓய்வு பெற்றும் அசுரன் ஆஸியை அடக்கி நாக் அவுட் செய்த இந்திய நாயகன் யுவராஜ் சிங்

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தத் தொடரில் ஜாம்பவான் யுவராஜ் சிங் தலைமையில் விளையாடும் இந்தியா சாம்பியன்ஸ் நேற்று நடைபெற்ற செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது. நார்த்தம்டன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய சாம்பியன்ஸ் யுவராஜ் சிங் 59, ராபின் உத்தப்பா 65, யூசுப் பதான் 51*, இர்பான் பதான் 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

அசுரனுக்கு அசுரன்:
அதைத் துரத்திய ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் 168/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 59 (28) ரன்களை 210.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முக்கிய பங்காற்றி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக நிறைய ஐசிசி கோப்பைகளை வென்று அலமாரியில் அடுக்கி வைத்துள்ள ஆஸ்திரேலியாவை கிரிக்கெட்டின் அசுரன் என்றே சொல்லலாம்.

ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை 2000ஆம் ஆண்டிலேயே அதுவும் 18 வயதில் நாக் அவுட் செய்த யுவராஜ் சிங் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆம் நைரோபியில் நடைபெற்ற 2000 சாம்பியன்ஸ் ட்ராபியில் 18 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் அற்புதமாக விளையாடிய யுவராஜ் சிங் 84 (80) ரன்கள் குவித்தார். அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவிய அவர் ஆஸ்திரேலியாவை அத்தொடரிலிருந்து வெளியேற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அதே போல தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 25 வயதில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி யுவராஜ் சிங் 70 (30) ரன்கள் குவித்தார். அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்தார். அதை விட 2011 உலகக் கோப்பை காலிறுதியில் முக்கிய நேரத்தில் 57* (65) ரன்கள் அடித்த அவர் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சாம்பியன் ஆஸ்திரேலியாவை நாட் அவுட் செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: இந்தியா பஸ்பாலை அழிக்கல.. உண்மையா இந்தியாவுக்கு இதை செஞ்சதே இங்கிலாந்து தான்.. ஹார்மிஷன் பேட்டி

அந்த வகையில் கடந்த 24 வருடங்களில் எதிர்கொண்ட 4 நாக் அவுட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற யுவராஜ் சிங் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்துள்ளார். இதிலிருந்து வலுவான ஆஸ்திரேலியாவை அழுத்தமான நாக் அவுட் போட்டியில் அடக்கும் இந்தியராக யுவராஜ் வலம் வருகிறார். இது அவருடைய திறமை மற்றும் போராட்ட குணத்தை பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -