வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து மீண்டும் இங்கிலாந்து வெற்றி பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.
ஏனெனில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாடியது. அந்தத் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்தினர் எச்சரித்தனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து முன்னிலையும் பெற்றது.
பஸ்பால் அழியவில்லை:
ஆனால் அதன் பின் சுதாரித்த இந்தியா அதிரடியாக விளையாடுவோம் என்று அடம் பிடித்த இங்கிலாந்தை வீழ்த்தி 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றதது. அதனால் இங்கிலாந்து அணியின் அதிரடியாக விளையாடப்படும் பஸ்பால் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக பஸ் பால் அணுகுமுறையை மூட்டை கட்டி வைத்து விட்டு வெற்றிக்காக விளையாடுங்கள் என நாசர் ஹுசைன், ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்ட பல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் பஸ்பாலை இந்தியா அழித்து விடவில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் மற்ற அணிகளை காட்டிலும் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் உண்மையான சவாலை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்திய மண்ணில் இங்கிலாந்து சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது என்றே நினைக்கிறேன். உண்மையாக அவர்கள் இந்தியாவிற்கு சில தலைவலிகளை கொடுத்தனர். ஆனால் திடீரென அனைத்தும் மாறியதால் இந்தியா வென்றது என்று அனைவரும் பேசினர். எத்தனை முறை நீங்கள் அப்படி விக்கெட்டுகள் மடமடவென விழுந்ததை பார்த்தீர்கள்? அதுவே ஒரு பிரச்சனையாகும். நீங்கள் கொஞ்சம் சூழ்நிலைகளை படிக்க வேண்டும்”
இதையும் படிங்க: விவரம் தெரியாத விராட் கோலி இல்ல.. இப்போ இதை பண்ண முடியாத அளவுக்கு வந்துட்டாரு.. ஜேம்ஸ் ஆண்டர்சன்
“உலகில் நீங்கள் அனைத்தையும் பெற முடியாது. அதே சமயம் கடந்த காலங்களை விட தற்போதைய டெஸ்ட் வீரர்கள் நன்றாகவே விளையாடுகின்றனர். இந்தியா பஸ்பாலை அழித்ததாக நான் கருதவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினர். அழுத்தத்தின் கீழ் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தனர். ஆனால் அந்த 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு உண்மையான தலைவலிகளை கொடுத்த தருணங்கள் நிறைய இருந்தன. அது போன்ற சவாலை நிறைய வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் கொடுத்ததில்லை” என்று கூறினார்.



