விவரம் தெரியாத விராட் கோலி இல்ல.. இப்போ இதை பண்ண முடியாத அளவுக்கு வளந்துட்டாரு.. ஜேம்ஸ் ஆண்டர்சன்

James Anderson 4
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2002இல் அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அனுபவத்தால் முன்னேறிய அவர் 21 வருடங்களில் 188 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனால் சச்சினுக்கு பின் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அவர் மொத்தம் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40000, சர்வதேச கிரிக்கெட்டில் 50000 பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற இரட்டை உலக சாதனையுடன் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். அதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சவாலான விராட் கோலி:
முன்னதாக தம்முடைய ஆரம்ப காலங்களில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சவாலை கொடுத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரை 9 முறை அவுட்டாகியுள்ளார். அதன் பின் விராட் கோலிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த அவர் 10 போட்டிகளில் 7 முறை அவுட்டாக்கியுள்ளார். குறிப்பாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரிடம் ரன்கள் அடிக்க முடியாமல் விராட் கோலி திண்டாட்டமாக செயல்பட்டார்.

ஆனால் நாளடைவில் அனுபவத்தால் முன்னேறிய விராட் கோலி 2018 சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஒருமுறை கூட அவுட்டாகாமல் சுமார் 700 ரன்கள் அடித்து தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் விவரமும் அனுபவமும் இல்லாத ஆரம்ப காலங்களில் விராட் கோலியை அனைத்து பந்துகளிலும் எளிதாக அவுட்டாக்கலாம் என்று உணர்ந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் நாளடைவில் முன்னேறி விட்டதால் சமீப காலங்களில் விராட் கோலியை தம்மால் அவுட்டாக்க முடியாது என்று உணர்ந்ததாக ஆண்டர்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எப்போதும் மேலையும் கீழையும் செல்வீர்கள். சில தொடர்களில் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். ஆனால் சில தொடர்களில் பேட்ஸ்மேன்கள் உங்களை விட அசத்துவார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலி சொன்னது உண்மை தான்.. அவரோட பாராட்டு எனக்கு வேண்டாம்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

“அந்த வகையில் ஆரம்பக் காலங்களில் கிட்டத்தட்ட விராட் கோலியை நீங்கள் ஒவ்வொரு பந்திலும் அவுட்டாக்கலாம் என்று உணர்ந்தீர்கள். ஆனால் சமீப காலங்களில் அவரை அவுட்டாக்க முடியாது என்பது போல தோன்றியது. அதனால் நீங்கள் தாழ்வாக உணர்கிறீர்கள்” என்று கூறினார். மொத்தத்தில் ஆண்டர்சனுக்கு எதிராக 710 பந்துகளை எதிர்கொண்டுள்ள விராட் கோலி 39 பவுண்டரிகள் உட்பட 305 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement