25 வருடம் 4வது முறையாக அசுரன் ஆஸியை நாக் அவுட் செய்த இந்தியாவின் உ.கோ நாயகன் யுவ்ராஜ்

IND vs AUS Yuvraj
- Advertisement -

இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 2025 மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் சச்சின் தலைமையில் விளையாடும் இந்தியா மாஸ்டர்ஸ் அணி தங்களது லீக் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணிகளை தோற்கடித்தது. ஆனால் கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி ஷேன் வாட்சன் தலைமையில் இந்தியாவை தோற்கடித்தது.

இருப்பினும் எஞ்சிய வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அடித்து நொறுக்கிய இந்தியா 220-7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

யுவ்ராஜ் அசத்தல்:

அவருடன் சரவெடியாக விளையாடிய யுவராஜ் சிங் ஒரு பவுண்டரி 7 சிக்ஸருடன் 59 (30) ரன்கள் வெளுத்து வாங்கினார். கூடவே ஸ்டுவர்ட் பின்னி 36 (21), யூசுப் பதான் 23 (10), இர்பான் பதான் 19* (7) ரன்கள் எடுத்து அசத்தினர். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பௌலிங் செய்த இந்தியா 18.1 ஓவரில் 126க்கு சுருட்டி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பென் கட்டிங் 39 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சபாஷ் நதீம் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் ஆஸ்திரேலியாவை இந்த தொடரிலிருந்து நாக் அவுட் செய்த இந்தியா லீக் சுற்றில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா தகுதி பெற்றது.

- Advertisement -

நாக் அவுட் நாயகன்:

முன்னதாக இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை இந்தியா நாக் அவுட் செய்வதற்கு யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார். 2000 சாம்பியன்ஸ் ட்ராபி காலிறுதியில் 84 (40) ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்தார். 2007 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனலில் 70 (30) ரன்கள் நொறுக்கிய யுவ்ராஜ் ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்கு காரணமே இந்திய அணியின் அந்த ஸ்ட்ரென்த் தான் – பாண்டிங் புகழாரம்

2011 உலகக் கோப்பை காலிறுதியில் 57* ரன்கள், 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். அந்த வரிசையில் தற்போது 25வது வருடத்தில் 4வது முறையாக ஓய்வு பெற்றும் ஆஸ்திரேலிய அணியை இந்தியா நாக் அவுட் செய்ய யுவ்ராஜ் உதவியுள்ளார். இதிலிருந்து அசுரன் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்வதில் யுவ்ராஜ் சிங் இந்தியாவின் அரசனாக செயல்பட்டு வருகிறார் என்றால் மிகையாகாது.

Advertisement