- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3000 ரன்ஸை மிஸ் பண்ணிட்டேன்.. கபில் தேவ் சொன்ன மாதிரி அதை செஞ்சுருந்தா இன்னும் அசத்திருப்பேன்.. யுவி வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உலகக் கோப்பை நாயகனாக வர்ணிக்கப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வெல்ல உதவிய அவர் இந்தியாவுக்காக நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த அவர் இந்தியாவின் சிக்ஸர் கிங்காகவும் அறியப்பட்டார்.

இந்நிலையில் இப்போது போல தம்முடைய காலத்தில் ஃகோல்ப் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்காக 3000 ரன்கள் கூடுதலாக அடித்திருப்பேன் என்று யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். அந்த விளையாட்டில் விளையாடுவதால் நிறைய பந்துகளை எதிர்கொள்ளும் ஆர்வம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதனாலேயே ஃகோல்ப் விளையாடியிருந்தால் கூடுதலாக 2000 ரன்கள் அடித்திருப்பேன் என்று ஜாம்பவான் கபில் தேவ் சொன்னதை தாமும் உணர்வதாக யுவ்ராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

3000 ரன்ஸ் மிஸ்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கபில் தேவ் பாஜி சொன்னதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஃகோல்ப் விளையாடிருந்தால் 2000 ரன்கள் கூடுதலாக அடித்திருப்பேன் என்று கபில் பாஜி தெரிவித்திருந்தார். நானும் அதை செய்திருந்தால் 3000 ரன்கள் கூடுதலாக அடித்திருப்பேன். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விதிமுறைகள் மாறியுள்ளன”

“இப்போதெல்லாம் உங்களுக்கு கிரிக்கெட்டில் மறு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஃகோல்ப் விளையாட்டில் நீங்கள் மோசமான ஷாட்டை விளையாடினால் கூட உங்களால் நல்ல ஷாட்டை அடித்து மீண்டும் ஓட்டைக்குள் பந்தை அனுப்பி கம்பேக் கொடுக்க முடியும். கிரிக்கெட்டில் நீங்கள் அவுட்டானால் அறையில் உட்கார்ந்து அடுத்த விளையாட்டைப் பற்றி யோசிக்க வேண்டும்”

- Advertisement -

யுவ்ராஜ் வருத்தம்:

“ஆனால் ஃகோல்ப் விளையாட்டில் நீங்கள் அவுட்டானால் உங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து விளையாடலாம். சில நேரங்களில் நீங்கள் மற்ற விளையாட்டுக்குச் சென்று விளையாடி புத்துணர்ச்சியாக (கிரிக்கெட்டுக்கு) மீண்டும் திரும்ப வர முடியும். இந்தியா ஒருநாள் தொடரில் விளையாடினால் அடுத்த ஒவ்வொரு போட்டிக்கும் 3 நாள் இடைவெளி இருக்கும்”

“எங்களுடைய காலத்தில் அந்த இடைவெளி நாட்களில் ஃகோல்ப் விளையாடினால் உடனே நாங்கள் பயிற்சி எடுக்கவில்லை என்று ஊடகங்கள் விமர்சிப்பார்கள். ஆனால் தற்போதும் அந்த மனநிலை மாறியுள்ளது. இங்கே நீங்கள் விளையாடி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டால் கிரிக்கெட்டில் அசத்த முடியும். அதனால் அனைத்து இளம் கிரிக்கெட்டர்களுக்கும் ஃகோல்ப் விளையாடி நீங்கள் விரும்பும் வகையில் அடியுங்கள் என்று சொல்வேன்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனின் இந்த திறமை போதாதா? அவரை 3 ஆம் இடத்தில் இறக்குங்க – முகமது கைப் ஆதரவு

“ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் கிரிக்கெட்டில் அதிகப்படியான பயிற்சிகள் எடுப்பது வேலை செய்யாது. நீங்கள் ரன்கள் அடிக்காத சூழ்நிலையில் ஃகோல்ப் விளையாடினால் அதிக பந்துகளை அடிக்க விரும்புவீர்கள். ரிலாக்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்” எனக் கூறினார்.

- Advertisement -