டி20 உ.கோ ஜெயிச்ச இந்திய அணியா இது? உண்மையான அழகும் சவாலும் அங்க காத்திருக்கு.. யுவராஜ் சிங்

Yuvraj Singh
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. அதன் வாயிலாக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இத்தனைக்கும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகத் தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் சொந்த மண்ணில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் இந்திய அணி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை:

இந்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பு மங்கியுள்ளது. குறிப்பாக அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் குறைந்தது 4 வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இப்படி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் இது தான் கிரிக்கெட்டின் அழகு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இங்கிருந்து சுய பரிசோதனை செய்ய வேண்டியுள்ள இந்திய அணிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாலில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய சவால்:

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கிரிக்கெட் உண்மையிலேயே ஒரு தாழ்மையான விளையாட்டு இல்லையா? டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களுக்கு பின் நாம் ஒரு வரலாற்று ஒயிட் வாஷ் தோல்வியை எதிர்கொள்கிறோம். அது தான் இந்த விளையாட்டின் அழகு. அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன”

இதையும் படிங்க: இதையும் ஏத்துக்கிட்ட தான் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும்.. தோல்விக்கு பிறகு – ரிஷப் பண்ட் எமோஷனல் பதிவு

“இது சுய பரிசோதனை செய்து கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கான வழி. சிறப்பாக விளையாடும் வரலாற்று வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். மொத்தத்தில் சொந்த மண்ணிலேயே இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளதால் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுமா என்று கேள்வி காணப்படுகிறது. அத்தொடரில் ஷமி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement