3 மாசம் தான் இருப்பிங்கன்னு டாக்டர் சொன்னாரு.. புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவ்ராஜ் உருக்கமான பேட்டி

Yuvraj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உலகக் கோப்பை நாயகனாக போற்றப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். 2011 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக அசத்திய அவர் 28 வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

முன்னதாக அந்தத் தொடரில் தமக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதை வெளியில் சொல்லாமலேயே விளையாடிய யுவராஜ் சிங் தொடர்நாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார். குறிப்பாக சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் அவர் வெயிலால் மிகவும் பாதிப்பை சந்தித்தார். அப்போது கூட தம்முடைய உடல்நிலையைப் பற்றி வெளியே சொல்லாத அவர் நாட்டுக்காக விளையாடினார்.

- Advertisement -

உலகக் கோப்பை நாயகன்:

அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட யுவ்ராஜ் சிங் புற்றுநோயையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தார். அடுத்து சில வருடங்களில் மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி 2019ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் புற்றுநோயால் நீங்கள் 3 – 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தம்மிடம் சொன்னதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

அதையும் தாண்டி குணமடைந்த தம்மால் மேற்கொண்டு கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று சொன்னவர்களுக்கு முன் சாதித்து காட்டியதாக யுவராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் 3 – 6 மாதங்கள் மட்டுமே இருப்பீர்கள் என்று உங்களிடம் சொல்லப்படும் போது, நாம் இறக்கப் போகிறோம் என்றே சிந்திப்பீர்கள்”

- Advertisement -

யுவ்ராஜ் உருக்கம்:

“என்னுடைய நுரையீரல் மற்றும் இதயத்துக்கு இடையே இருந்த கட்டி நரம்பு மண்டலத்தை அழுத்தியது. அதனால் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 வருடங்கள் கழித்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அதற்கிடைப்பட்ட காலங்களில் சுமார் 40 போட்டிகளில் நான் 12வது வீரராக இருந்தேன்”

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் ஃபார்முக்கு திரும்ப டிராவிஸ் ஹெட் மாதிரி இதை செஞ்சா போதும்.. ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

“அப்படி காத்திருந்த எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அப்போது அமெரிக்காவுக்கு அறுவை சிகிச்சை செல்வதை தவிர்த்து எனக்கு வேறு வழியில்லை. மருத்துவமனையில் டாக்டர்.என்ஹார்ன் என்னிடம். “இங்கிருந்து நீங்கள் புற்றுநோய் இல்லாத ஒரு மனிதராக வெளியே போவீர்கள்” என்று சொன்னது எனக்கு பலத்தைக் கொடுத்தது. கடைசியில் அனைத்து தெளிவும் வந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்று நினைத்த போது அது 2வது வாழ்க்கை போலத் தோன்றியது. மீண்டும் விளையாடுவது சாத்தியமல்ல என்று உலகம் சொன்ன போது, நான் அதை நிரூபித்துக் காட்ட விரும்பினேன்” என்று கூறினார்.

Advertisement