- Advertisement -
ஐ.பி.எல்

விலகும் நட்சத்திரம்.. ஐபிஎல் 2025 தொடரில் பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் யுவராஜ் சிங்.. எந்த அணிக்கு தெரியுமா?

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதற்கு ஆலோசகராக செயல்பட்டு முக்கிய பங்காற்றிய கெளதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். மறுபுறம் இந்திய அணியிலிருந்து விடைபெற்ற ராகுல் டிராவிட் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் ராஜஸ்தான் அணியின் இயக்குனராக செயல்பட்டு வந்த குமார் சங்ககாரா அடுத்த வருடம் அந்த பதவியிலிருந்து விலக உள்ளார். எனவே அவருக்கு பதிலாக டிராவிட்டை தங்களுடைய அணியின் பயிற்சியாளராக நியமிக்க ராஜஸ்தான் முயற்சித்து வருவதாக புதிய செய்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஏற்கனவே ராஜஸ்தானுக்காக விளையாடிய டிராவிட் தலைமையில் அந்த அணி 2013 சாம்பியன்ஸ் டி20 லீக் ஃபைனல் வரை சென்று அசத்தியது.

- Advertisement -

யுவராஜ் பயிற்சியாளர்:
எனவே தம்முடைய முன்னாள் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜாம்பவான் யுவராஜ் சிங் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி ஆசிஷ் நெஹ்ரா வழிகாட்டுதலில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது.

ஆனால் இந்த வருடம் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ள நிலையில் குஜராத் அணியின் பெரும்பாலான பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. அதே போல புதிய கேப்டனாக அனுபவமற்ற சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படி மொத்தமாக மாறியுள்ள தலைமையை விரும்பாத தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ரா மற்றும் இயக்குனர் விக்ரம் சலோங்கி ஆகியோர் குஜராத் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதனால் யுவராஜ் சிங்கை அடுத்த தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க குஜராத் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக புதிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் ஒரு வீரராக தாம் முன்னேறுவதற்கு யுவராஜ் உதவி செய்ததாக கடந்த காலங்களில் கில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 43 ரன்ஸ்.. ஷாருக்கான அதிரடி.. மதுரையை அடக்கிய நடப்பு சாம்பியன் கோவை.. பிளே ஆஃப்க்கு தகுதி

எனவே அந்த இருவரும் தங்கள் அணியின் கேப்டன் – பயிற்சியளராக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று குஜராத் அணி கருதுகிறது. இது பற்றி ஐபிஎல் நிர்வாகி பேசியது பின்வருமாறு. “நிறைய மாற்றங்கள் வரப்போகிறது. ஆசிஷ் நெஹ்ரா, விக்ரம் சோலங்கி விலகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. யுவராஜ் சிங்கை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கி விட்டது. எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் குஜராத் அணியின் பயிற்சியாளர் குழுவில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்” என்று கூறினார்.

- Advertisement -