ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக வரப்போகும் யுவ்ராஜ் சிங்.. எந்த அணிக்கு தெரியுமா? – விவரம் இதோ

Yuvraj Singh
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வரும் இந்த ஐபிஎல் தொடர் மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்குவதால் ரசிகர்களும் இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது.

பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் யுவ்ராஜ் சிங் :

அதனை தொடர்ந்து அடுத்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது அடுத்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

அதற்கு முன்னதாக பல்வேறு அணிகளிலும் முக்கிய மாற்றங்கள் பல நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக வரவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகாலம் அனுபவம் உடைய யுவ்ராஜ் சிங் ஒரு சில அணிகளுக்கு ஒரு சீசன்களில் கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஐபிஎல்-லில் இருந்து விடைபெற்ற அவர் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது முழுநேர பயிற்சியாளராக மாற இருக்கும் யுவ்ராஜ் சிங் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் லக்னோ அணியின் நிர்வாக தலைவரான சஞ்சீவ் கோயங்கா யுவ்ராஜ் சிங்கை தலைமை பயிற்சியாளராக கொண்டுவர அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இரண்டாவது டி20 போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்தியா ஆஸ்திரேலியா வீரர்கள் – என்ன காரணம்?

ஒருவேளை இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் சம்மதித்தால் யுவ்ராஜ் சிங் முதல் முறையாக பயிற்சியாளராக வருவார். ஏற்கனவே பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

Advertisement