இந்திய அணி ஜெய்ச்சுடாங்க.. சுப்மன் கில் அவங்களுக்கு நம்ப முடியாத பதிலடி கொடுத்துட்டாரு.. யுவி பாராட்டு

Yuvraj Singh
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சமன் செய்து அசத்தியது. அதிலும் கடைசிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்றார்கள்.

அதனால் கில் தலைமையிலான இளம் இந்திய அணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று பல முன்னால் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள். அதே போல இதற்கு முன் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் பெரியளவில் ரன்கள் குவித்ததில்லை. அதனால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

- Advertisement -

நம்ப முடியாத பதிலடி:

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே அபாரமாக விளையாடிய கில் 754 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அதன் வாயிலாக டான் ப்ராட்மேனுக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை கில் படைத்துள்ளார். அதே போல இளம் இந்திய அணியும் தொடரை சமன் செய்து மைக்கேல் வாகன், கிரேம் ஸ்வான் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அசத்தவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு சுப்மன் கில் இங்கிலாந்தில் 4 சதங்களை அடித்து நம்ப முடியாத பதிலடி கொடுத்துள்ளதாக ஜாம்பவான் யுவ்ராஜ் சிங் பாராட்டியுள்ளார். அதே போல விராட், ரோஹித் போன்ற சீனியர்கள் இல்லாமல் இளம் இந்தியா தொடரை சமன் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அது வெற்றிக்கு சமம் என்றும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இளம் இந்தியா ஜெய்ச்சுடாங்க:

இது பற்றி ஐசிசி நிகழ்ச்சியில் யுவ்ராஜ் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் வெளிநாட்டு ரெக்கார்ட் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அந்த சூழ்நிலையில் இந்தப் பையன் கேப்டனாக வந்து 4 சதங்கள் அடித்துள்ளார். அப்படி உங்களிடம் பொறுப்பு கொடுக்கப்படும் போது நீங்கள் அதை எவ்வாறு ஏற்கிறீர்கள் என்பதைப் பார்ப்பது நம்ப முடியாததாக இருக்கிறது”

இதையும் படிங்க: சுப்மன் கில்லை சேர்த்தா அது நியாயமா இருக்காது.. நிராகரிக்க தயாராகும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

“நம்முடைய இளம் அணியால் நிறையப் பெருமைப்படுகிறேன். உண்மையில் அது டிராவில் முடிந்த தொடராக இருந்தாலும் நமக்கு வெற்றி பெற்றதைப் போன்ற உணர்வைத் தருகிறது. ஏனெனில் அது மிகவும் இளமையான அணி. இளம் அணியாக இங்கிலாந்துக்கு சென்று சிறப்பாக விளையாடி உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் காட்டுவது எளிதான விஷயம் கிடையாது” என்று கூறினார்.

Advertisement