சுப்மன் கில்லை சேர்த்தா அது நியாயமா இருக்காது.. நிராகரிக்க தயாராகும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் சர்வதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அற்புதமான செயற்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

சுப்மன் கில்லுக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு கிடையாது :

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேனாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 10 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களை விளாசி 750 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.

- Advertisement -

அதேபோன்று சுப்பன் கில்லை எதிர்கால நிரந்தர கேப்டனாக நிர்வாகம் பார்ப்பதனால் டி20 போட்டிகளில் மீண்டும் அவருக்கு இடம் வழங்குவதோடு மட்டுமின்றி சூரியகுமார் யாதவ் ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போனால் அவருக்கு கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூட சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி :

இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இல்லை என நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடைசியாக கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டி20 போட்டியில் விளையாடியிருந்த வேளையில் அதற்கடுத்து இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரின் போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொடர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் தங்களது இடத்தினை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக டாப் ஆர்டரில் எந்த இந்திய வீரர்களையும் வெளியேற்ற முடியாது. ஒருவேளை சுப்மன் கில்லை அணிக்குள் கொண்டு வந்தால் அது நியாயமாக இருக்காது என்று கருதும் நிர்வாகம் அவருக்கு வாய்ப்பினை மறுக்கவுள்ளது.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணி டிம் டேவிடை இப்படி எடுத்தது உண்மையிலேயே மிகச்சிறப்பான முடிவு – அஷ்வின் பாராட்டு

என்னதான் சுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தலாக செயல்பட்டாலும் தற்போதைய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியாது என்றும் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வழக்கமாக டி20 போட்டியில் விளையாடும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆசிய கோப்பை தொடருக்காகவும் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement