திரைப்படமாகப்போகும் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் கதை.. பயோபிக் படத்தில் நடிக்கப்போகும் – ஹீரோ யார் தெரியுமா?

Yuvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கடந்த 2000-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2017-வரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கிடைத்த மிக முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்படும் யுவராஜ் சிங் இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளில் பங்காற்றிய பெருமை உடையவர்.

குறிப்பாக 2007-டி20 உலக கோப்பை, 2011 50-ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளை வென்ற அணியிலும் யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். அது தவிர்த்து 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 132 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக 6 பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் யுவராஜ் சிங் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக அதிகாரவப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் பூஷன் குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு “சிக்ஸ் சிக்சர்ஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரவப் பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பூஷன் குமார் மற்றும் ரவி ஆகியோர் யுவராஜ் சிங்கை சந்தித்து இந்த பயோபிக் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

- Advertisement -

புற்றுநோயை எதிர்த்து போராடி மீண்டும் வந்து சாதித்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கு ஊக்கமாக இருக்கும் என்பதனால் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் யுவராஜ் சிங்கின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 39 ரன்ஸ்.. ஒன்னாக்காது என்றாலும் யுவராஜ் சிங்.. பொல்லார்ட் உலக சாதனை தூளாக்கிய சமோவா வீரர்

ஏற்கனவே யுவராஜ் சிங் தனது பயோ குறித்து ஒரு நேர்காணலில் பேசுகையில் தனது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்தால் அதில் சித்தார்த் சதுர்வேதி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement