ஐபிஎல் சுமாரா போனாலும்.. இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் அவர் ஸ்பெஷலா ஆடுவாரு.. யுவ்ராஜ் நம்பிக்கை

Yuvraj Singh 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகளை சந்தித்த மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

அந்த அணியின் இந்த தோல்விக்கு பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தொடர்ந்து பெரிய ரன்கள் எடுக்க தவறியது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் சதமடித்ததை தவிர்த்து பெரும்பாலான போட்டிகளில் சுமாராகவே செயல்பட்ட அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அவரை விட புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

யுவ்ராஜ் நம்பிக்கை:
அதே போல கேப்டனாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பிய அவர் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தார். அந்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாகவும் துணைக் கேப்டனாகவும் செயல்பட உள்ள அவர்கள் சுமாரான ஃபார்மில் உள்ளது கவலைக்குரிய அம்சமாகும். குறிப்பாக முதன்மை ஆல் ரவுண்டராகவும் ஃபினிஷராகவும் அறியப்படும் ஹர்திக் பாண்டியா ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் உள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஸ்பெஷலாக செயல்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவ்ராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தேர்வு நடைபெற்று முடிந்து விட்டது என்பது நல்லது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதை தேர்வாளர்கள் பார்த்தனர்”

- Advertisement -

“அதே சமயம் ஐபிஎல் ஃபார்ம் மட்டும் முக்கியமல்ல. ஏனெனில் நீங்கள் ஐபிஎல் ஃபார்மை அடிப்படையாக பார்க்கும் போது ஹர்திக் பாண்டியா நன்றாக செயல்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இந்தியாவுக்காக வெளிப்படுத்திய செயல்பாடுகளின் பின்னணியை பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அவருடைய ஃபிட்னஸ் மற்றும் பவுலிங் ஆகியவை இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும்”

இதையும் படிங்க: இந்தியா எப்படியாவது கழற்றி விடப்பாக்குறாங்க.. ஆனா கோலி தான் டி20 உலகக் கோப்பையில் அதை செய்யனும்.. பாண்டிங்

“இந்த உலகக் கோப்பையில் அவர் ஏதேனும் ஸ்பெஷலாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல பாண்டியாவிடம் நல்ல திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவர் ஃபிட்டாக இல்லாதது முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. எனவே அதை சரி செய்து கொண்டு உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அவர் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement