முடிஞ்சா விராட் கோலியிடம் செஞ்சு காட்டுன்னு சவால் விட்டாங்க.. செஞ்சுருவேன் ஆனா.. ஹர்ஷித் ராணா பேட்டி

Harsit Rana
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை சாதனை படைத்தது. இந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அசத்திய அந்த அணி இறுதிப் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே ஹைதராபாத் அணியை சந்தித்தது.

அப்போட்டியில் மயங் அகர்வாலை அவுட்டாக்கிய கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணா அதை தன்னுடைய கையில் முத்தமிட்டு அவருடைய முகத்தில் காற்றில் பறக்க விட்டு வெறித்தனமாக கொண்டாடினார். அது பல ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் மயங் அகர்வால் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரராக அறியப்படுகிறார்.

- Advertisement -

தடுக்கும் மரியாதை:
மறுபுறம் ஹர்ஷித் ராணா பற்றி பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. எனவே சீனியர் என்று மதிப்பு கொடுக்காமல் இளம் வயதில் இந்த கொண்டாட்டம் தேவையா? என்று ரசிகர்கள் விமர்சித்தனர். சொல்லப்போனால் இதெல்லாம் தேவையில்லாத வேலை மிஸ்டர் ராணா என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அவரை கண்டித்திருந்தார். அத்துடன் அந்த செயலுக்காக பிசிசிஐ அவருக்கு அபராதம் விதித்திருந்தது.

ஆனால் அப்போதும் திருந்தாத அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரேலை அவுட்டாக்கியதும் “மைதானத்தை விட்டு வெளியே போ” என்ற சைகை செய்து வெறித்தனமாக கொண்டாடினார். அதனால் கடுப்பான பிசிசிஐ அவருக்கு அபராதமும் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதித்தது. அதனால் அடங்கிய அவர் ஃபைனலில் விக்கெட்டை எடுத்த போது அமைதியாக கொண்டாடினார்.

- Advertisement -

இந்நிலையில் மயங் அகர்வால் போல விராட் கோலிக்கு எதிராக அப்படி உங்களால் கொண்டாட முடியுமா என்று சிலர் தம்மிடம் சவால் விடுத்ததாக ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். ஆனால் அதை எப்போதும் தாம் செய்ய மாட்டேன் என்று தெரிவிக்கும் அவர் அதற்கான காரணத்தை பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “அதை முதல் போட்டியிலோ அல்லது இரண்டாவது போட்டியிலோ செய்வதற்கு நான் திட்டமிடவில்லை”

“ஆனால் அதை செய்ததும் உங்களால் முடிந்தால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் செய்து காட்டுங்கள் என்று பலரும் சொன்னார்கள். இருப்பினும் நான் விராட் கோலி மீது மரியாதை வைத்திருப்பதால் அவரிடம் அவ்வாறு செய்ய மாட்டேன். அனைத்து வீரர்களிடமும் நான் மரியாதை வைத்துள்ளேன். குறிப்பாக விராட் கோலிக்கு முன்பாக அதை என்னால் செய்ய முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இலங்கையை வீழ்த்த ரோஹித் படை எதற்கு.. ஸ்ரேயாஸை இறக்கும் பிசிசிஐ.. ஜிம்பாப்வே தொடர் பற்றியும் தகவல்

முன்னதாக தன்னுடைய சொந்த மாநிலமான டெல்லியில் இருந்து வந்த கௌதம் கம்பீர், விராட் கோலி, ரிசப் பண்ட் போன்ற வீரர்கள் ஆக்ரோஷம் நிறைந்தவர்கள் என்று ஹர்ஷித் நானா தெரிவித்தார். எனவே அவர்களைப் போல தாமும் இயற்கையாகவே ஆக்ரோசத்தை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement