2 பேரும் மேட்ச் வின்னர்ஸ்.. ஃபார்மில் இருந்தா அவர் பாகிஸ்தானை 60 பந்தில் நொறுக்கி சதமடிப்பாரு.. யுவ்ராஜ் பேட்டி

Yuvraj Singh
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைக்கு நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் அந்த அணி தோற்றது.

மறுபுறம் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலங்களில் சந்தித்த பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்தப் போட்டியில் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்தால் 60 பந்துகளில் சதத்தை விளாசுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் கணித்துள்ளார்.

- Advertisement -

60 பந்தில் 100:

அதே போல விமர்சனங்களுக்கு மத்தியில் உள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவின் மேட்ச் வின்னர்கள் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் யுவ்ராஜ் பேசியது பின்வருமாறு. “ஃபார்மில் இருந்தால் ரோகித் 60 பந்துகளில் சதத்தை அடிப்பார். அது தான் அவருடைய தரம். ஒருமுறை துவங்கி விட்டால் அவர் பௌண்டரிகளை மட்டுமின்றி சிக்ஸர்களையும் எளிதாக அடிப்பார்”

“ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் அவர் உலகின் சிறந்த ஒரு வீரர். 140 – 150 கி.மீ வேகத்தில் வீசினால் கூட ரோஹித் சர்மா அதை அசால்ட்டாக ஹூக் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடிக்கும் திறமையைக் கொண்டவர். 120 – 140 என்றளவில் கொண்டுள்ள அவர் தன்னுடைய நாளில் தனியாளாக உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்”

- Advertisement -

மேட்ச் வின்னர்கள்:

“ரோகித் சர்மா ஃபார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை. எப்போதுமே நான் மேட்ச் வின்னர்களை ஆதரவு கொடுப்பேன் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்தியாவுக்காக விராட் கோலியுடன் மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். தடுமாற்றமாக இருந்தும் ரோஹித் சர்மா ரன்கள் அடித்தால் அது எதிரணிக்கு ஆபத்தான அறிகுறியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அந்த ஃபார்மட்டில் சுப்மன் கில் தங்கம்.. துணை கேப்டன்ஷிப் எதுக்குன்னு கேட்டவங்களுக்கு பதிலடி.. அஸ்வின் பேட்டி

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா கடந்த இங்கிலாந்து தொடரில் சதத்தை அடித்து வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அதிரடியாக 41 ரன்கள் குவித்தார். எனவே ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் பாகிஸ்தானையும் புரட்டுவார் என்று நம்பலாம். அவரைப் போல விராட் கோலியும் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement