எனது கேரியரில் சிறப்பான சிக்ஸர் என்றால் அது இதுதான் – யுவராஜ் பகிர்ந்த வீடியோ

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது ஐபிஎல் குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தான் விளையாடிய காலத்தில் முன்னணி ஆல்-ரவுண்டராக விளையாடிய இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கேப்டன் பதவி செய்தது மட்டுமின்றி பஞ்சாப், பெங்களூர், மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என பல்வேறு பணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் அடித்த அற்புதமான சிக்சர் வீடியோ ஒன்றிணை யுவ்ராஜ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துஅதன்படி அவர் பகிர்ந்து இந்த ஷார்ட் மிகவும் கடினமான ஒன்று அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர் ஓவரில் ஓவர் கவர்ஸ் திசையில் சிக்ஸர் அடிப்பது என்பது எளிதான விடயம் கிடையாது. எனக்கு பிடித்த சிக்ஸர்களில் என்னுடைய கேரியரில் இது ஒரு முக்கியமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் அடிக்கப்பட்ட சிக்சரானது 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அவர் விளையாடிய போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்திற்க்கு எதிராக அடிக்கப்பட்டது. இந்த ஷாட் நிச்சயம் கிரிக்கெட்டில் கடினமான சாட் என்றே கூறலாம்.

ஏனெனில் வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக எதிர்ப்புமுனையில் சிக்ஸர் அடிக்க ஒரு பலம் தேவை. அதனை முழுவதுமாக யுவ்ராஜ் அந்த சிக்ஸரில் வெளிப்படுத்தியுள்ளார். அதனாலே அவரே வியந்து இந்த சிக்ஸரை தனது கிரிக்கெட் கேரியரில் பிடித்த சிக்ஸர்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement