யார் இப்படி எல்லாம் சொல்றாங்கன்னு தெரியல. ஏன் எப்படி பண்றேங்கனும் தெரியல – யுவராஜ் அதிருப்தி

Yuvraj
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த வருடம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் கமெண்ட்ரி செய்வது, தொண்டு நிறுவனங்களுக்கு பணியாற்றுவது என பல வேலைகளில் பிசியாக இருக்கிறார். மேலும் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவரது தம்பி அவரது மனைவி மற்றும் அவரது அம்மா ஆகியோர் இணைந்து ஒரு வெப் சீரீஸ் தொடரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது . இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவராஜ் சிங் அதனை திட்டவட்டமாக மறுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ட்வீட் ஆவது..

வெப் சீரியடில் நான் நடிக்கப் போகிறேன் என சமீபத்தில் வெளிவந்த செய்திகள் உண்மையில்லை. அந்த செய்திகள் தவறானது அந்த வெப் சீரியசில் எனது தம்பி மட்டுமே நடிக்கிறார். இதனை ஊடக நண்பர்கள் சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இவ்வாறு பதிவு செய்துள்ளார் யுவராஜ் சிங்.

Advertisement