இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 2000ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 19 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு யுவராஜ்சிங் அறிவித்த போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை இந்திய அணிக்காக யுவராஜ் 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் யுவ்ராஜ் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 6 பந்தில் 6 சிக்ஸர்கள் அடித்தது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதன்படி 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து பிராடின் தூக்கத்தை அவர் பறித்தார். அந்த நாளை மறக்காத கிரிக்கெட் ஊடகங்கள் நேற்று இவரை புகழ்ந்து செய்திகளை வெளியிட்டன.
12 years ! Never thought I’ll hit 6 in a row . Although started practicing very early ???? special #memory . 666666 ☝???? pic.twitter.com/pUOvlzL1Cn
— yuvraj singh (@YUVSTRONG12) September 19, 2019
இந்நிலையில் இவரது இந்த சாதனையை நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் 6 சிக்சர்கள் அடித்த நெகிழ்ச்சியான நிகழ்வு பற்றி யுவராஜ் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதன்படி நான் இந்த சாதனையை செய்து 12 வருடங்கள் ஆகிறது. நான் இதை நினைத்துக் கூட பார்க்கவில்லை மேலும் நான் இளம் வயதில் பயிற்சி தொடங்கியது போது கூட நான் ஆறு பந்தில் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என்று நினைத்தது இல்லை இது ஒரு சிறப்பான நினைவாகும் என்று யுவராஜ் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.