6 பந்தில் 6 சிக்ஸர்கள் விளாசி தனது சாதனையை சமன் செய்த பொல்லார்டை வாழ்த்திய யுவ்ராஜ் – விவரம் இதோ

yuvraj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது அந்நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

dananjaya

- Advertisement -

அடுத்ததாக 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே அதிரடியை வெளிக்காட்டியது. சிம்மன்ஸ் 26 ரன்களும், லீவிஸ் 28 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அதன் பிறகு நான்காவது ஓவரை வீசிய இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்ஜெயா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார்.

இதில் லீவிஸ், கெயில்(0), நிக்கலஸ் பூரன்(0) ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று பொறுமையாக விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கேப்டன் பொல்லார்ட் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்ஜெயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்சர்கள் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது சர்வதேச டி20 போட்டியில் முதலாவது நபராக 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை செய்தார். அந்த சாதனையை நேற்று நடைபெற்ற போட்டியில் பொல்லார்ட் சமன் செய்துள்ளார். மேலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பவுலரின் ஓவரிலேயே இந்த சாதனையை வந்திருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களில் 134 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்நிலையில் பொல்லார்ட்டின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வர முதன் முதலில் இந்த சாதனையை செய்த சிக்ஸர் நாயகனான யுவ்ராஜ் சிங்கும் தனது பங்கிற்கு பொல்லார்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார். அதில் “வெல்கம் டூ தி கிளப்” #பொல்லார்ட் “சிக்ஸ் சிக்ஸஸ் யு பியூட்டி” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement