ஷாருக்கான் அவசரப்பட்டு தப்பு செய்து விட்டார். அவர் இதை செய்திருக்கக்கூடாது – யுவராஜ் பேட்டி

Yuvraj
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

lynn

- Advertisement -

அதன்படி கொல்கத்தா அணியும் சில வீரர்களை விடுவித்தது. அதில் முக்கிய வீரரான ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் அந்த அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. கிறிஸ் லின் தற்போது டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

அதே தொடரில் மராத்தா அரபியன்ஸ்ஸ் அணியில் விளையாடி வரும் யுவராஜ் சிங் க்றிஸ் லின் குறித்து கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக்கானுக்காக மெசேஜ் செய்யவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி க்றிஸ் லின்னுடன் நான் தற்போது ஒரே அணியில் ஆடி வருகிறேன். அவர் அதிரடியாக விளையாடுவதைப் பார்க்கும் பொழுது அவரை கழட்டிவிட்ட கேகேஆர் அணி சற்று அவசரப்பட்டு தவறு செய்து விட்டது என்றே தோன்றுகிறது.

chris

ஒரு சில போட்டிகளில் அவர் சொதப்பினாலும் இந்த ஐபிஎல்லில் நிச்சயம் அதிரடியாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை ஷாருக்கான் தவறாகவே முடிவெடுத்து விட்டார் என்றே கூறுவேன். அவர் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று யுவராஜ் தெரிவித்தார். கிறிஸ் லின் சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்தும் 30 பந்துகளில் 91 ரன்கள் குவித்தும் அதிரடி காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement