யுவராஜ் சிங் புதிய கிங்ஸ் XI பஞ்சாப் புது ஜெர்சி மற்றும் நம்பர் – புகைப்படம் உள்ளே

yuvraj1
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

yuvi

- Advertisement -

இந்த வருடம் ஐபிஎல்-இல் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரியில் பெங்களூரில் நடைபெற்றது.இந்த ஏலத்தில் பஞ்சாப் அணி யுவராஜ் சிங் மற்றும் முதல்நாள் ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெய்லை இரண்டாம் நாள் கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுத்தது.

அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.இறுதியாக தான் இருவரையும் அவர்களது ஏலத்தின் அடிப்படை விலையான 2 கோடியை கொடுத்து வாங்கியது.

preityuvi

அவுட் ஆப் பார்மில் இருந்துவரும் யுவராஜ்சிங் விரைவில் மீண்டு இந்த ஐபிஎல்-இல் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சமீபத்தில் பஞ்சாப் அணியின் ஜெர்சி அறிமுகவிழா நடைபெற்றது. சிவப்பு மற்றும் சில்வர் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியின் முன்புறத்தில் டைட்டில் ஸ்பான்சரான கென்ட் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

ஜெர்சியின் இடதுபுறத்தில் அணியின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் அணியின் புது ஜெர்சி யுவராஜ்சிங்கிற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

Advertisement