யுவராஜ் இருக்கும் போது அஸ்வின் ஏன் ? – Kings XI பஞ்சாப் அணி விளக்கம்.

yuvraj
- Advertisement -

11லது ஐபிஎல் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.இதில் அஷ்வின் 7.6 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.அக்சர் படேலை மட்டும் தக்கவைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் ஆகிய முக்கிய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
YuvrajSingh

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், அந்த அணியின் ஆலோசகர் சேவாக் பேஸ்புக் லைவ் சாட்டில் கலந்து கொண்டு, கேப்டன் யார் என்பதை இன்று தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சேவாக், பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவார் என்று நேற்று அறிவித்தார்.
யுவராஜ் சிங் இருக்கும்போது அஸ்வின் ஏன் எனவும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சேவாக் “யுவராஜ் சிங் கேப்டன் லிஸ்டில் இருந்தார்” ஆனால் ஒரு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். மேலும் அஷ்வின் தனது திறமையை வெளிப்படுத்தினால் நீண்ட கால கேப்டனாக அவர் செயல்பட வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.
ashwin

யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது அஸ்வினுக்கே பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தமிழர்கள் பலரும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement