டைம் ஆகுது சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. குறும்பு தனத்தை கனடாவில் காட்டிய யுவராஜ் – வைரல் வீடியோ

Yuvraj
- Advertisement -

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் டொராண்டோ இன்டர்நேஷனல் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை 2 போட்டியில் ஆடிய யுவராஜ் முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடினார். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பு எதிரணி வீரர் பென் கட்டிங் போட்டி குறித்து பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த யுவராஜ் எப்போது நீங்கள் கல்யாணம் செய்யப் போகிறீர்கள் நேரமாகிறது சீக்கிரம் கல்யாணத்துக்கு தயாராகுங்கள் என்று கூறினார்.

அவரை பேட்டி எடுத்தது அவரின் காதலியம் வருங்கால மனைவி எரிக் ஹோலண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜன் இந்த குறும்புத்தனம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement