ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து பெங்களூரு அணியை அலறவிட்ட யுவராஜ் சிங் – வைரல் வீடியோ

Yuvraj
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் யுவராஜ் சிங் பேட்டிங் செய்தபோது 14 ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்தினையும் சிக்ஸ் அடிக்க நினைத்த யுவராஜ் முதல் மூன்று பந்தினை சிக்ஸ் அடித்தார். நாலாவது பந்தினையும் சிக்ஸ் அடிக்க எண்ணிய யுவராஜ் தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் இருந்த சிராஜ் அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இதோ அந்த ஹாட்ரிக் சிக்ஸ் வீடியோ :

- Advertisement -

இந்த போட்டியில் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்த யுவராஜ் 3 சிக்ஸர்களை அடித்தார். நேற்றைய போட்டியில் அந்த கேட்சை சிராஜ் விட்டிருந்தால் 6 சிக்ஸர்களை அடிக்கும் நோக்கில் யுவராஜ் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement