பஞ்சாப் அணியில் இருந்து நான் வெளியேற இதுவே காரணம் – யுவராஜ் சிங் ஓபன் டாக்

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வில் இருக்கும் வீரர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் ஐ.பி.எல் குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

Yuvi 2

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். குறிப்பாக இந்திய அணி வெற்றிபெற்ற அனைத்து ஐசிசி கோப்பைகளிலும் யுவ்ராஜின் பங்கு முக்கியமானது. அதிலும் குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதையும் இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இந்தியாவில் ஐபிஎல் துவங்கியதிலிருந்து பஞ்சாப் அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன் பின்னர் மீண்டும் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை விளையாடினார். ஆனால் பஞ்சாப் நிர்வாகம் அவரை விரும்பாத காரணத்தினால் அந்த அணியில் இருந்து ஓடிவிட நினைத்ததாக யுவராஜ் தற்போது அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர் 2010ஆம் ஆண்டு திடீரென அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

preityuvi

இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட அனுபவ வீரரான இலங்கை அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டார். இதன்காரணமாக 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இருந்து விலகிய யுவ்ராஜ் சிங்க் புனே அணிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் அளித்த கசப்பான அனுபவங்களே தான் வெளியே அதற்கு காரணம் என்று யுவ்ராஜ் சிங் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நிர்வாகம் தன்னை விரும்பாத போதும் நான் பஞ்சாப் அணி மீது கொண்ட அன்புக்காகவே அந்த அணியில் தொடர்ச்சியாக விளையாடினேன் என்று யுவ்ராஜ் தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விட்டு ஓடிவிடலாம் என்று கூட நினைத்து உள்ளேன். ஏனெனில் அணி நிர்வாகத்திற்கு என்னை பிடிக்கவில்லை மேலும் நான் கூறிய வீரர்களை அவர்கள் ஏலத்தில் எடுக்க மறுத்தனர்.

yuvi

தொடர்ந்து நான் அவர்களிடம் அணிக்கு தேவையானவற்றை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் நான் கூறுவதை எதுவும் கேட்கவில்லை. மேலும் எதையும் செய்து கொடுக்கவும் இல்லை. ஆனால் நான் அணியில் இருந்து விலகிய பின்னர் நான் கேட்ட எல்லா வீரர்களையும் அவர்கள் ஏலத்தில் எடுத்தனர். நான் பஞ்சாப் அணியை மிகவும் நேசித்தேன். ஆனால் அந்த அணியின் நிர்வாகத்தை நேசிக்கவில்லை.

ஏனெனில் எனது கருத்துக்களுக்கு எதிர்மறையான தேடல்களை அவர்கள் முன்வைத்து வந்தனர் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆன யுவ்ராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மட்டுமல்ல ஐபிஎல்லில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள அனுபவம் உடையவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என பல ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி உள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள், 12 பந்துகளில் அரை சதம் அடித்தவர் என்ற உலக சாதனையை யுவராஜ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement