ஆஸ்திரேலிய தோல்வியை விட அந்த தோல்வி அவங்களுக்கு ரொம்ப பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் – யுவ்ராஜ் சிங்

Yuvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோருக்கு கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த ஆண்டாக மாறியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட தோல்வியோடு அந்த வாய்ப்பிலிருந்து வெளியேறியது.

ஆஸ்திரேலிய தோல்வியை விட இது ரொம்ப பாதிச்சிருக்கும் :

மேலும் இப்படி இந்திய அணி இந்த வாய்ப்பை தவறவிட கடந்த ஆண்டு முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதோடு தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இருவரும் விடைபெற்று இளம் வீரர்களுக்கு வழி கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

அந்த அளவிற்கு கடந்த ஆண்டு அவர்கள் இருவருக்குமே மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் தன்னம்பிக்கை இழந்து ஆஸ்திரேலிய தொடரிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்வியை விட சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விதான் விராட் கோலியையும், ரோகித் சர்மாவையும் மிகவும் பாதித்திருக்கும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மக்கள் அனைவரும் அவர்கள் இருவரது சறுக்களை மட்டுமே பேசுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவர் உங்கள் இந்திய அணிக்கு செய்த பங்களிப்பை பெரிதாக பேசவில்லை.

- Advertisement -

என்னை பொறுத்தவரை அவர்கள் இருவருமே இந்திய அணிக்காக பெரிய பங்கினை அளித்துள்ளார்கள். நிச்சயம் அவர்கள் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார்கள். இந்திய அணி என்னதான் தற்போது பின்னடைவை சந்தித்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீண்டு வரும். என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வியை விட சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்தபோது அவர்கள் இருவருமே மிகவும் வருத்தப்பட்டு இருப்பார்கள்.

இதையும் படிங்க : 3 விக்கெட்ஸ்.. இன்னும் என்ன வேணும்.. தொடர்ந்து அசத்தும் ஷமி.. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேர்வு செய்யப்படுவாரா?

இம்முறை நம்முடைய வாய்ப்பு நம் பக்கம் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருவருமே சிறந்த வீரர்கள். நிச்சயம் அவர்களால் திரும்பி வந்து மீண்டும் இந்திய அணிக்கு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என யுவ்ராஜ் சிங் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement