3 விக்கெட்ஸ்.. இன்னும் என்ன வேணும்.. தொடர்ந்து அசத்தும் ஷமி.. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேர்வு செய்யப்படுவாரா?

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்தார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஒரு வருடமாகியும் இதுவரை இந்திய அணிக்காக விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சொல்லப்போனால் அவர் இந்திய அணிக்காக விளையாடாதது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

இத்தனைக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே விளையாடத் துவங்கிய ஷமி ரஞ்சிக் கோப்பை, சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் நன்றாக பவுலிங் செய்தார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் ஜனவரி ஒன்பதாம் தேதி ஹரியானா மற்றும் பெங்கால் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.

- Advertisement -

ஷமி அசத்தல்:

வதோதராவில் நடைபெற்ற அந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அடுத்ததாக களமிறங்கிய ஹரியானா 50 ஓவரில் 298-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்த் வட்ஸ் 62, நிசாந்து சிந்து 64, சுமித் குமார் 41* ரன்கள் எடுத்தார்கள்.

பெங்கால் அணிக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 10 ஓவரில் 61 ரன்களை 6.1 என்ற நல்ல எக்கனாமியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய பெங்கால் முடிந்தளவுக்கு போராடியும் 43.1 ஓவரில் 226 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 57 ரன்களை எடுத்த நிலையில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹரியானாவுக்கு அதிகபட்சமாக பர்த் வட்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

கம்பேக் எப்போது:

இருப்பினும் பீகார் மற்றும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான கடந்த இரண்டு போட்டிகளில் ஷமி தலா 8 ஓவர்கள் வீசினார். அதில் 40, 28 ரன்கள் கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை விட இந்த போட்டியில் முதல் முறையாக 10 ஓவர்கள் வீசிய ஷமி 3 விக்கெட்டுகள் எடுத்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 4, 4, 4, 4, 4, 4.. ஜெகதீசன் மிரட்டல்.. சக்ரவர்த்தி 18 விக்கெட்ஸ்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் வாய்ப்பு கொடுக்க ரசிகர்கள் கோரிக்கை

அப்படி தொடர்ச்சியாக அவர் அசத்துவது வருவதை பார்க்கும் ரசிகர்கள் இந்தியாவுக்காக விளையாட இன்னும் என்ன தான் செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. அதில் அசத்தும் பட்சத்தில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஷமி இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement