முதல்முறை அவரை சந்தித்து கைகுலுக்கியதும் அன்றைய நாள் முழுவதும் நான் குளிக்கவேயில்லை – மனம்திறந்த யுவ்ராஜ் சிங்

Yuvraj

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 17 வருடங்கள் விளையாடியவர். 38 வயதான அவர் சென்ற வருடம்தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மொத்தம் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும், 304 ஒருநாள் போட்டிகளிலும், 58 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

yuvi

மொத்தமாகச் சேர்த்து 12 ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார் 17 சதங்கள் 71 அரை சதங்கள் சர்வதேச அளவில் அடித்து இருக்கிறார். இவர் 2000ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நன்றாக விளையாடி இந்திய அணிக்காக அறிமுகமானார். சௌரவ் கங்குலி இவரை அறிமுகப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சச்சினை நேருக்கு நேர் சந்தித்த முதல் தருணத்தில் அவருடன் கைகுலுக்கி விட்டு அந்த நாள் முழுவதும் குளிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் யுவராஜ்சிங். அவர் கூறுகையில் …

Yuvi-3

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தேன் முதல் போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் உடன்விளையாடியதை என்னால் மறக்க முடியாது. நான் பள்ளியிலும் பேருந்திலும் சேட்டை செய்து கொண்டே இருப்பேன். அந்த நேரத்தில் சச்சின் என்னிடம் வந்து கை கொடுத்தார். அப்போது வானில் பறப்பது போன்று உணர்ந்துகொண்டேன். அவர் சென்ற உடன் எனது கையை உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு அன்று முழுவதும் குளிக்காமல் இருந்தேன்.

- Advertisement -

Yuvi-1

2011 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து உலக கோப்பையை வென்றது அலாதியானது. இந்த உலகக் கோப்பை போட்டி அவருக்கு கடைசி உலகக்கோப்பைஎன்பது எனக்கு தெரியும் 22 வருடங்கள் இந்திய அணிக்காக உழைத்த ஒரு மனிதருக்கு நாங்கள் கொடுத்த பரிசு அது என்று தெரிவித்திருக்கிறார் யுவராஜ் சிங்.