இவருக்கு நன்கு பயிற்சி அளியுங்கள் இந்திய அணியின் அடுத்த தோனி இவர்தான் – பீட்டர்சன் மற்றும் யுவராஜ் ஒருமித்த கருத்து

Yuvi

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.#

Dhoni-2

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோரது கருத்து இரண்டும் ஒன்றாக ஒரு இந்திய வீரரை பற்றி அளித்துள்ளார்கள்.

அது யாதெனில் இந்தியனின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் தான். இந்த அரையிறுதிப் போட்டியில் அவர் சாதிக்கவில்லை என்றாலும், அவருடைய இயற்கையான ஆட்டம் அதிரடி ஆட்டம் தான். இந்த போட்டியில் அவர் ஆட்டம் இழந்தது அவரது தவறு இல்லை. மேலும் அவர் ஒருசில போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளதால் இன்னும் அவருக்கு இன்னும் அனுபவம் தேவை.

Pant

அவ்வாறு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கினால் அவர் அதிலிருந்து கற்றுக் கொண்டு எப்போது அதிரடியாக ஆட வேண்டுமோ அப்போது அதிரடியாக அணிக்காக சிறப்பாக செயல்படுவார். இந்திய அணியில் தோனி ஓய்வு பெற இருக்கும் இந்த வேளையில் அடுத்த தோனியாக இவரே வலம் வருவார் என்றும் யுவராஜ் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் ஒருமித்த கருத்தினை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -