என்ன பண்றாங்க ஐ.பி.எல் அம்பயர்ஸ். ஆதாரத்துடன் கோபத்தை வெளிப்படுத்திய யுவ்ராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் – விவரம் இதோ

yuvi-bajji

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று முன்தினம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

RCBvsSRH

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் 32 ரன்களையும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 39 ரன்களையும், ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வானார்.

sandeep

ஐபிஎல் தொடரில் பல்வேறு அம்பயர்கள் செய்த தவறுகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியிலும் பெயரில் தவறு ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களும் சரியாக குறிப்பிடப்பட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உதானா வீசிய ஒரு புல்டாஸ் பந்தினை அம்பயர் நோ பால் கொடுக்க மறுத்தார்.

- Advertisement -

வில்லியம்சன் அந்த பந்தினை அடிக்கும்போது தோள்பட்டைக்கு மேல் இருந்தது இந்த பந்திற்கு நோபால் ஏன் குடுக்க வில்லை ? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் இந்த வீடியோவுடன் அம்பயர் செய்த தவறை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று யுவ்ராஜ் சிங்கும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும் ரசிகர்கள் பலரும் அவர் செய்தது தவறுதான் என்றும் அந்த பந்து நோபால் தான் என்று இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.